சியான் 63 படத்தின் விக்ரமிற்கு ஜோடி இந்த நடிகையா? வைரலாகும் தகவல்
Chiyaan 63 Movie: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சியான் 63. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தின் அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம் (Actor Vikram) இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற வருகின்றது. அதன்படி இறுதியாக நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக தனது 63-வது படத்திற்காக யாருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் மடோன் அஸ்வின் நடிகர் சியான் விக்ரமின் 63 படத்தை இயக்க உள்ளதாக முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்த கூட்டணி குறித்த அப்டேட் எதுவும் அடுத்தடுத்து வெளியாகவில்லை. இதன் காரணமாக ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்தப் படம் வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில் சியான் விக்ரமின் 63-வது படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி இயக்குநர் போடி கே ராஜ்குமார் இந்தப்ப் அடத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




சியான் விக்ரமிற்கு ஜோடியாகும் நடிகை மீனாட்சி சௌத்ரி:
இந்த நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முன்னதாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மீனாட்சி சௌத்ரி சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது!