இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்… பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரே நாளில் நுழைந்த 4 வைல்கார்ட் போட்டியாளர்கள்!
Bigg Boss Tamil Season 9 : பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 28 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக 4 பேரை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி 4-வது வாரத்தை எட்டியுள்ளது. அதன்படி 20 போட்டியாளர்கள் உடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அதன்படி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமையில்தான் அந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற உள்ள போட்டியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்த வாரம் சனி கிழமையான நேற்றே பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆனது யார் என்பது குறித்த அறிவிப்பை விஜய் சேதுபதி வெளியிட்டு விட்டார். அதன்படி நேற்று 4-வது வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு குறைவான வாக்குகளைப் பெற்ற கலையரசன் தான் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேறுவதற்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் கலையரசன் எத்தனை முறை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் என்பது குறித்தும் இத்தனை சீசன்களில் உள்ள போட்டியாளர்களில் இவர்தான் பிக்பாஸ் வீட்டில் அதிக அளவில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்து போட்டியாளர்களின் செயல்களால் கடுப்பான விஜய் சேதுபதி தொடர்ந்து வாரம் வாரம் அவர்களிடம் கடிந்துகொண்டே பேசி வருகிரார். இந்த நிலையில் நேற்று 01-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு எபிசோடில் வீட்டில் உள்ள அனைவரையும் லெஃப்ட் ரைட் வாங்கினார். பிக்பாஸ் வீட்டில் எந்த சண்டைக்கும் போகாமல் அமைதியாக இருந்த துஷார் மற்றும் அரோரா வரை அனைவரிடமும் கடிந்து பேசினார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து இருந்தது. இதுதான் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியதிலேயே பெஸ்ட் எபிசோட் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.




பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 5 வைல்ட்கார்ட் போட்டியாளர்கள்:
அதன்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் 4-வது வாரத்தின் தொடக்கத்திலேயே எந்த 4 பேர் வைல்கார்ட் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிகழ்ச்சி குழு வெளியிட்டு இருந்தது.
அதன்படி இவர்கள் 4 பேரும் வாரத்தின் நடுவே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று விஜய் சேதுபதியின் எபிசோடில் அவரை சந்தித்த பிறகே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள். 4 போட்டியாளர்களுமே உள்ளே சென்று என்ன செய்ய போகிறோம் என்பது குறித்தும் வெளிப்படையாக பேசிவிட்டே சென்றுள்ளனர்.
Also Read… ஓர் ஆண்டுகளை நிறைவு செய்தது அமரன், லக்கி பாஸ்கர் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day28 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/affYZVC0tS
— Vijay Television (@vijaytelevision) November 2, 2025