Jailer 2: கோவாவில் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
Rajinikanth Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் ஜெயிலர் 2. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெற்றுவரும் நிலையில், அங்கு ஷூட்டிங் முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
தென்னிந்தியா சினிமாவில் ரசிகர்கள் பலராலும், சூப்பர் ஸ்டார் மற்றும் தலைவர் என்று அன்புடன் அழைக்கப்பட்டுவருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் பிரம்மாண்ட நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியிருந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக மீண்டும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் கைகோர்த்த படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாக உருவாகிவருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மார்ச் 10ம் தேதி முதல் சென்னையில் தொடங்கியிருந்தது. இதை அடுத்ததாக இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றுவந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்ட எட்டிய நிலையில், விரைவில் நிறைவடையவுள்ளது.
அண்மையில் கோவாவில் (Goa) இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், நேற்று 2025 நவம்பர் 2ம் தேதியில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். விரைவில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரஜினி புதிய படத்தில் இணையவுள்ளார் என கூறப்படுகிறது.




இதையும் படிங்க : 129 அறுவை சிகிச்சைகள்… சினிமா நடிகன் என்பதால் என நினைக்கிறார்கள் – அஜித் குமார் ஓபன் டாக்
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த ஜெயிலர் 2 திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துவருகிறார். ரஜினி, சன் பிச்சர்ஸ் மற்றும் அனிருத் காம்போவில் வெளியாகிய பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்துடன் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னான் மேனன், சிவராஜ்குமார், மோகன்லால், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணனா, ஃபகத் ஃபாசில் உட்பட பல்வேறு நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : பைசன் படத்தில் அனுபமாவுக்கும் துருவுக்கும் வயது வித்தியாசத்துக்கு காரணம் இதுதான் – மாரி செல்வராஜ்!
இந்த ஜெயிலர் 2 படமானது மிக பிரம்மாண்ட நடிகர்களுடன் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த படத்தை வரும் 2026ம் ஆனது ஜூன் மாதத்தில் வெளியாகும் என ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்கள் பேட்டியில் ஓபனாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம் :
இப்படத்தை அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல்வேறு படங்ககளின் கதைகளை கேட்டுவருகிற. அந்த வகையில் இவர் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் அப்டேட் வரும் 2025 நவம்பர் 7ம் தேதியில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.