Dhruv Vikram: மாரி செல்வராஜ் நடித்து காட்டுவதில் ஒரு வலி தெரிந்தது.. பைசன் படத்திற்கு பின் எல்லாம் மாறிடுச்சு – துருவ் விக்ரம் பேச்சு!
Dhruv Vikram About Bison Film Experience: தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துருவ் விக்ரம். இவரின் முன்னணி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் பைசன். இந்த படத்தில் மாரி செல்வராஜுடன் பணியாற்றியது மற்றும் திருநெல்வேலியில் கிராமங்களில் இருந்து நடித்த அனுபவம் குறித்து துருவ் விக்ரம் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சியான் விக்ரமின் (Chiyaan Vikram) மகன் ஆவார். இவரும் அவரின் தந்தையை போல சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை 3 படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்த பைசன் (Bison) திரைப்படம்தான் அவரின் முழுமையான நடிப்பில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் நடித்த படங்கள் ரீமேக் மற்றும் சியான் விக்ரமுடன் ஒரு படம் வீதத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இவருக்கு இந்த பைசன் படம்தான் முதல் பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தமிழ் பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கியிருந்தார், இவரின் இயக்கத்தில் வெளியான 5வது படம்தான் பைசன்.
இந்த படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் மாரி செல்வராஜுடன் பணியாற்றியது குறித்தும், நேரடியாக திருநெல்வேலி கிராமங்களில் நடித்தது குறித்து துருவ் விக்ரம் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஷாருக்கானின் 60வது பர்த்டே.. இன்று வெளியான ‘கிங்’ பட அறிவிப்பு வீடியோ!
மாரி செல்வராஜுடன் பணியாற்றியது குறித்த அனுபவத்தை பகிர்ந்த துருவ் விக்ரம் :
அந்த நேர்காணலில் நடிகர் துருவ் விக்ரம், பைசன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். மேலும் பேசிய அவர் இயக்குனர் மாரிசெல்வராஜ் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “மாரி செல்வராஜ் சார் முதலில் கதையை இவ்வாறு பண்ணனும் என்று சொல்லுவாரு, நீங்க எப்படி நடிப்பீர்களா என்று பார்த்து, பின் அவரே நடித்து காட்டுவார். அவரின் நடிப்பில் ஒரு வலி தெரியும். அதையெல்லாம் தொடர்ந்து ஒரு கிரமத்தில் , ஒரு குடிசையில் கிட்ட இரண்டு மாடுகளுடன் மற்றும் மண் வாசனை, மாடு சாணம் வாசனை எல்லாம் உங்களை அதுவாகவே வேறு ஒரு நிதானத்திற்கு கொண்டு சென்றுவிடும்.
இதையும் படிங்க: இரண்டு வானம் படத்தின் கதை இதுதான் – விஷ்ணு விஷால்!
அந்த இடத்தில இருந்து ஒரு காட்சியில் நாம் நடிக்கும்போது, ரொம்ப நன்றாக இருக்கும். படம் பார்ப்பதற்கு முன் ஒரு நடிகராக நான்பட்ட கஷ்டங்கள் மட்டும் தெரிந்தது. அந்த படத்தைப் பார்த்துவிட்டு இது நானா? அது வேறு யாரோ என என்னையே யோசிக்கவைத்தது” என்று அவர் அதில் ஓபனாக பேசியுள்ளார்.
கண்ணகி நகர் கபடி வீராங்கனையை பாராட்டியது குறித்து துருவ் விக்ரம் வெளியிட்ட பதிவு
View this post on Instagram
நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா என்ற கபடி வீராங்கனையை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இது தொடர்பான வீடியோவை அவர் அவரின் இன்ஸ்டர்கிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.