கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் கதை என்ன? – நடிகர் ஆனந்தராஜ் பேச்சு!
Anandaraj About Karthi Role In Vaa vaathiyaar Movie:நடிகர் கார்த்தியின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் வா வாத்தியார். இந்த படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சூர்யாவிற்கு (Suriya) எந்த அளவிற்கு பிரபல இருக்கிறதோ, அதே போன்ற பிரபலமானவர்தான் அவரின் தம்பி கார்த்தி (Karthi). இவரும் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது மெய்யழகன் (Meiyazhagan). தமிழில் இப்படத்தின் இவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகர் நானியின் (Nani) நடிப்பில் 2025 மே மாதத்தில் வெளியான ஹிட் 3 (HIT3) படத்திலும் சிறப்பு வேடத்தில் இவர் நடித்திருந்தார். இந்த ஹிட் 3 படத்தை அடுத்ததாக உருவாகும் ஹிட் 4 படத்தில் கார்த்திதான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் வரும் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகவுள்ள படம்தான் வா வாத்தியார் (Vaa Varthiyaar). இந்த திரைப்படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்கியிருந்த நிலையில், ஸ்டூடியோ க்ரீன் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துவருகிறது.
இந்த படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ் (Anandraj) மற்றும் சத்யராஜ் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஆனந்தராஜ், வா வாத்தியார் திரைப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க : தி கேர்ள்ஃபிரண்ட் படத்தின் கதையை முதலில் நிராகரித்த நடிகை.. அட இவரா?
வா வாத்தியார் படத்தில் கார்த்தியின் கதாபாத்திரம் பற்றி சொன்ன ஆனந்தராஜ் :
சமீபத்தில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ஆனந்தராஜ், கார்த்தியின் வா வாத்தியார் படம் பற்றி ஓபனாக பேசியுள்ளார். அதில் அவர், “இப்போது வா வாத்தியார் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அதில் கார்த்தி சார், சத்யராஜ் சார் மற்றும் ராஜ்கிரண் சார் என பல பேர் நடித்திருக்கிறோம். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் பிறப்பவர்தான் கார்த்தி. அவரின் கதாபாத்திரமும் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கு “என்று அந்த நேர்காணலில் நடிகர் அனந்தராஜ் ஓபனாக பேசியுள்ளார்.
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பு பதிவு :
The Swag Master locks the date! 💥#VaaVaathiyaar storms into theatres on December 05, 2025🔥
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical #VaaVaathiyaarOnDec5@Karthi_Offl @StudioGreen2 @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj @GMSundar_ pic.twitter.com/aXD8Lcp6y5— Vaa Vaathiyaar (@VaaVaathiyaar) October 8, 2025
இந்த வா வாத்தியார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: தூக்கி விடனும்னு அவசியம் இல்லை… பின்னுக்கு தள்ளாமல் இருந்தால் சரி – இயக்குநர்கள் குறித்து அஜித்குமார் ஓபன் டாக்
இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து முதல் பாடல் கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 1 மாதம் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.