Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

129 அறுவை சிகிச்சைகள்… சினிமா நடிகன் என்பதால் என நினைக்கிறார்கள் – அஜித் குமார் ஓபன் டாக்

Ajith Kumar About Accidents And Surgeries: நடிகர் அஜித் குமார் நடிகர் மற்றும் கார் ரேஸராக இருந்துவருகிறார். இவர் நடிப்பில் கவனம் செலுத்திவந்தாலும், கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாக முழுவதும் கார் ரேஸில் இருந்துவருகிறார். இந்நிலையில் கார் ரேஸில் சந்தித்த விபத்துகள் குறித்து அஜித் மனம்திறந்துள்ளார். அது குறித்து வெளிப்படையாக பார்க்கலாம்.

129 அறுவை சிகிச்சைகள்… சினிமா நடிகன் என்பதால் என நினைக்கிறார்கள் – அஜித் குமார் ஓபன் டாக்
அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Nov 2025 20:38 PM IST

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களைக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சினிமா ஒரு கண் மற்றும் கார் ரேஸ் (Car Race) ஒரு கண் என்று இரண்டிலும் கவனம் செலுத்திவருகிறார் இவர். அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) மற்றும் விடாமுயற்சி (Vidaamuyarchi) என 2 படங்கள் வெளியாகியிருந்தது. இதில் இவருக்கு விடாமுயற்சி படத்தை காட்டிலும், குட் பேட் அக்லி படமானது நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நடிகர் அஜித் குமார கார் ரேஸ் போட்டியில் இணைந்திருந்தார்.

இவர் இந்தியாவின் சார்பாக தனது அணியுடன், பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு பல கோப்பைகளை பெற்றிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை நேர்காணலில் பேசிய அஜித் குமார், தனக்கு நடந்த விபத்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : இரண்டு வானம் படத்தின் கதை இதுதான் – விஷ்ணு விஷால்!

தனது விபத்துகள் மற்றும் அறுவை சிகிச்சை குறித்து ஓபனாக பேசிய அஜித் குமார்:

அந்த நேர்காணலில் நடிகர் அஜித் குமார் தனது பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். அப்போது அவர் தனது கார் ரேஸ் விபத்து மற்றும் தனது அறுவை சிகிச்சைகள் குறித்து ஓபனாக பேசியுள்ளார். அதில் அவர், “நானும் துரதிர்ஷ்டவசமாக, மற்ற பல ஓட்டுநர்களைப் போலவே நானும் பயங்கரமான விபத்துகளைச் சந்தித்திருக்கிறேன்.

இதையும் படிங்க : நடிகை நதியாவின் இளமை ரகசியம் இதுவா? அவரே சொன்ன சீக்ரட் விஷயம்!

ஆனால் நான் ஒரு நடிகர் என்பதால அடிக்கடி விபத்துகளை சந்திப்பதாக பலரும் நினைத்துவருகிறார்கள். கார் ரேஸை ஒப்பிடும்போது நான் சினிமாவில் இருக்கும்போதே, எனக்கு 129 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

விபத்துகளை சந்தித்தது குறித்து அஜித் குமார் பேசிய வீடியோ :

நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் குட் பேட் அக்லி படத்தை அடுத்ததாக Ak64 படமானது உருவாகிவருகிறது. இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் அறிவிப்புகள் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என அஜித் கூறியுள்ளார்.