Tere Ishq Mein: தனுஷ் மற்றும் கிருதி சனோனின் ‘தேரே இஷ்க் மே’.. வெளியானது செகண்ட் சிங்கிள்..!
Tere Ishq Mein Movie: தனுஷ் , இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் 3-வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் தேரே இஷ்க் மே. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து யூஸி கெஹ்னா என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்தி மொழியில் மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் உருவாகிவரும் திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Anand L. Rai) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் ராஞ்சனா (Raanjhanaa )மற்றும் அத்ரங்கி ரே என்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர்களின் கூட்டணியில் 3வது உருவாகியிருக்கும் திரைப்படம்தான் தேரே இஷ்க் மே. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் இது ஒரு காதல் மற்றும் காதல் தோல்வி குறித்த அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் (AR. Rahman) இசையமைத்துவருகிறார்.
இவரின் இசையமைப்பில் தீபாவளியை முன்னிட்டு முதல் பாடல் வெளியாகியிருந்த நிலையில், இன்று 2025 நவம்பர் 3ம் தேதியில், இப்படத்தின் 2வது சிங்கிளான “யூஸி கெஹ்னா” (Usey Kehna) என்ற பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கோவாவில் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!
தனுஷின் தேரே இஷ்க் மே படத்திலிருந்து வெளியான 2வது பாடல் தொடர்பான பதிவு :
A song that says what hearts couldn’t – every note, every pause, every breath.❤️🔥#UseyKehna out now: https://t.co/EtOWDDuajo#TereIshkMein in cinemas 28th November in Hindi, Tamil & Telugu.@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma… pic.twitter.com/DulEDypxg9
— T-Series (@TSeries) November 3, 2025
தனுஷின் தேரே இஷ்க் மே படத்தின் கதை என்ன :
இந்த தேரே இஷ்க் மே திரைப்படமானது முழுவதும் காதல் தொடர்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் கிருதி சனோன் இருவரும் காதலிக்கிறார்கள். இதில் தனுஷ் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர். சில காரணங்களால் இவர்கள் இருவரும் பிரிகிறார்கள்.
இதையும் படிங்க : உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம் – வைரலாகும் தகவல்
அதை தொடர்ந்து நடிகை கிருதி சனோனின் கதாபாத்திரம் வேறு ஒருவரை காதலிக்கிறது. அதை தனுஷ் விரும்பாத நிலையில், அவரின் மனத்தை எவ்வாறு மாற்றி மீண்டும் காதலிக்க வைக்கிறார் என்பது இந்த படத்தின் மைய கருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.
தேரே இஷ்க் மே படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது:
இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படம் தனுஷின் 4வது பாலிவுட் திரைப்படம் என்ற நிலையில், மக்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் அமையும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் நிலையில், தமிழ் மக்களிடையேயும் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.