இது மலையாள சினிமாவில் வெளியான ஒரு ரியல் ஸ்டோரி… பார்வதி நடிப்பில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய டேக் ஆஃப் படம்!
Take Off Movie: மலையாள சினிமாவில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டேக் ஆஃப். சர்வைவல் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகை பார்வதி நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டேக் ஆஃப். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டேக் ஆஃப். இந்தப் படத்தில் நடிகை பார்வதி திருவோத்து (Actress Parvathy Thiruvothu) முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் குஞ்சக போபன், ஃபஹத் பாசில், திவ்யபிரபா, பிரகாஷ் பெலவாடி, ஸ்ரீலால் வாரியார், எரிக் சகரியா, பார்வதி டி. அஞ்சலி நாயர், பிரேம் பிரகாஷ், ருக்சார் ரஹ்மான், அலென்சியர் லே லோபஸ், தேவி அஜித், ஸ்ரீஜா தாஸ், விஷ்ணு பிரகாஷ், ரெபேக்கா சந்தோஷ், ரோனி டேவிட் ராஜ், உஜ்வல் சோப்ரா, சல் யூசுப், ஆசிப் அலி, பிரியதர்ஷி புலிகொண்டா, ஜோஜு ஜார்ஜ், சித்தார்த்த சிவா, ஷாஹீன் சித்திக் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜேஷ் பிள்ளை ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் ஆண்டோ ஜோசப், ஷெபின் பேக்கர் மற்றும் மேகா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் கோபி சுந்தர் மற்றும் ஷான் ரகுமான் ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
டேக் ஆஃப் படத்தின் கதை என்ன?
ஆசிஃப் அலியை திருமணம் செய்து இருந்த பார்வதி திருவோத்து குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் அவரிடம் இருந்து பிரிந்து கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறார். நர்சாக பணியாற்றி வரும் பார்வதி குடும்ப சூழல் காரணமாக சம்பளம் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக ஈராக்கிற்கு செல்கிறார்.




Also Read… தனுஷின் 55-வது படம் எப்படி இருக்கும்? இணையத்தில் கசிந்த தகவல்
குஞ்சக போபனை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பார்வதி அவருக் நர்ஸ் என்பதால் அவருடன் இராக்கில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார். அந்த சமையத்தில் அங்கு நடந்த ஒரு கலவரம் காரணமாக மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்கள் தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்படுகின்றனர்.
அவர்களை காப்பாற்ற இந்தியாவில் இருந்து ஐஎஃப்எஸ் அதிகாரியான ஃபகத் பாசிலை அரசாங்கம் நியம்மிக்கிறது. அதனைத் தொடர்ந்து பார்வதி எப்படி அந்த சூழலில் இருந்து வெளியேற ஃபகத் பாசிலுடன் இணைந்து செயல்படுகிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் கேரளாவில் இருந்து வேலைக்கு சென்ற பெண்களுக்கு நடந்த உண்மைச் சம்மவம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… 31 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை படம்… நடிகர் சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு!