வாழ்க்கையில் போலி முகமூடி எனக்கு தேவையில்லை – நடிகை பார்வதி திருவோத்து
Actress Parvathy Thiruvothu: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை பார்வதி திருவோத்து. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் வாழ்க்கை குறித்து நடிகை பார்வதி திருவோத்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
                                மலையாள சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை பார்வதி திருவோத்து (Actress Parvathy Thiruvothu). இவரது நடிப்பில் தொடர்ந்து மலையாள சினிமாவில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியான நோட் புக், சிட்டி ஆஃப் காட், பேங்களூர் டேய்ஸ், என்னு நிண்ட மொய்தின், சார்லி, டேக் ஆஃப், டேக் ஆஃப், உயரே, புழு, உள்ளொழுக்கு மற்றும் ஹெர் ஆகிய படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேறபைப் பெற்றது. தொடர்ந்து தமிழில் நடிகை பார்வதி திருவோத்து கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பூ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
இந்தப் படத்தில் கிராமத்து பெண்ணாக ஒல்லியாக காட்சியளித்த நடிகை பார்வதியை மரியான் படத்தில் பார்த்த ரசிகர்கள் வியந்தனர். மேலும் மரியான் படத்தை தொடர்ந்து தமிழில் நடிகை பார்வதி நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், கன்னடம், இந்தி என தொடர்ந்து பான் இந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக இறுதியாக நடித்தப் படம் தங்கலான். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




வாழ்க்கையில் போலி முகமூடி எனக்கு தேவையில்லை:
இந்த நிலையில் நடிகை பார்வதி திருவோத்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வாழ்க்கை குறித்து பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, வாழ்க்கையில எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கலாம். எதையும் மறைச்சு வாழ்றதுல எந்த பிரயோஜனுமும் இல்லை. அதனால் வெளிப்படையாக இருப்பது நல்லது.
மேலும், என்னை பொறுத்தவரை என் மனதில் என்ன நினைக்கிறனோ அதைப் பேசிவிடுவேன். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் நல்லவர் என்று பேர் வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை. என்னால் முகமூடி போட்டு ஒரு வாழ்க்கை வாழ முடியாது என்றும் நடிகை பார்வதி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Also Read… நாளை மாலை வெளியாகிறது பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ
நடிகை பார்வதி திருவோத்து சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… பிக்பாஸ் வீட்டில் பார்வதி, திவாகரை விசச்செடிகள் என்று சொன்ன பிரஜின் – வைரலாகும் வீடியோ!