Rana Daggubati: நடிப்பு சக்கரவர்த்தி துல்கர் சல்மான்.. நான் அவரின் ரசிகனாகிவிட்டேன் – ராணா!
Rana Daggubati Praises Dulquer Salmaan: தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து காந்தா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் துல்கரின் நடிப்பை பற்றி ராணா புகழ்ந்து பேசியுள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராணா டகுபதி (Rana Daggubati). இவர் தெலுங்கில் எந்த அளவிற்கு பிரபலமான நடிகரோ, அது போல தமிழிலும் பிரபலமானவர் தான். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அந்த வகையில் இவரின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் காந்தா (Kaantha). இதில் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருக்கும் நிலையில், நடிகர் ராணாவும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த காந்தா படமானது ஒரு பிரியாட்டிக் கதைகளத்துடன் உருவாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 1960 ஆம் ஆண்டில் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எமோஷனலான கதைக்களத்தில் இப்படமானது வரும் 2025 நவம்பர் 14 ஆம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் இன்று 2025 நவம்பர் 6 ஆம் தேதியில் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய ராணா நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பை புகழ்த்துள்ளார்.




இதையும் படிங்க: மாஸ்க் படத்தில் நடிப்பதற்கான காரணம் இதுதான்- கவின் ராஜ் ஓபன் டாக்!
நடிகர் துல்கர் சல்மானை புகழ்ந்து பேசிய ராணா டகுபதி :
அந்த நிகழ்ச்சியில் நடிகர் ராணா, “நடிப்பு சர்காவர்த்தி துல்கர் சல்மான். இதை இயக்குநர் செல்வமணி காந்தாவில் சொல்லிருக்காரு, வரும் 2025 நவம்பர் 14ம் தேதிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் அதைத்தான் சொல்வார்கள், அதை நான் உறுதியாக கூறுகிறேன். இனிமேல் இந்தியாவில் ஒரு பீரியாட்டிக் கதையை எழுதவேண்டும் என்றால் துல்கர் சல்மானை நினைத்துதான் அவர்கள் எழுதுவார்கள் என நினைக்கிறேன். அவருக்கு சரியான நேரம் இல்லாமல் போனால்தான் மற்ற நடிகர்களிடம் அந்த கதை போகும்.
இதையும் படிங்க: எனது கேரியரில் ஸ்பெஷல் திரைப்படம் காந்தா.. நெகிழ்ச்சியாக பேசிய துல்கர் சல்மான்!
எப்படி இருந்தாலும் துல்கர் சல்மான் எனது நெருக்கிய நண்பர்தான், அதை யாராலும் மாற்றமுடியாது. இந்த காந்தா படத்திற்கு பிறகு நான் துல்கர் சல்மானின் ரசிகனாகவே மாறிவிட்டேன். மிகவும் பிரம்மதமான நடிகர் இவர், இந்த படத்தை பார்க்கும்போது இவரின் நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கிறது. மேலும் எனது தந்தையும் துல்கர் சல்மானின் நடிப்பை கண்டு வியந்தார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகர் ராணா டகுபதி வெளியிட்ட காந்தா பட ட்ரெய்லர் பதிவு :
The world of Kaantha unfolds today!💎
TRAILER OUT NOW!💥Tamil – https://t.co/MyKwnQqamn
Telugu – https://t.co/eLCEJncnfg
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production 🎬#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse… pic.twitter.com/P02h1dk49Y
— Rana Daggubati (@RanaDaggubati) November 6, 2025
ராணா தற்போது காந்தா படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதுபோல, நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் திருநாளோடு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.