இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷனா? இணையத்தில் கவனம் பெறும் தவகல்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 5-வது வார இறுதியில் எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு 8 சீசன்கள் முடிவடைந்து தற்போது 9-வது சீசன் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த சீசன் கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த சீசன் தொடங்கி தற்போது 5-வது வாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த சீசனில் தொடக்கத்தில் 20 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்ட நிலையில் 4 போட்டியாளர்கள் வைல்கார்டில் நுழைந்தனர். மொத்தம் 24 போட்டியாளர்களில் தற்போது 19 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். ஒவ்வொரு வாரமும் ஒரு ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதன்படி முதல் வாரத்தில் இருந்து இந்த நிகழ்வு நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் பிக்பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் நாமினேட் ஆகியுள்ளனர். அதனபடி கானா வினோத், விக்கல்ஸ் விக்ரம், பிரவீன் ராஜ், திவாகர், வியானா, பார்வதி, கெமி, ரம்யா ஜோ, சபரி, கம்ருதின், துஷார் மற்றும் எஃப்ஜே ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறி வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஹோட்டல் பணியாளர்களாக பணியாற்றினர்.




இந்த வாரம் டபுள் எவிக்ஷனா பிக்பாஸ் வீட்டில்:
மொத்தம் 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நாமினேட் ஆகியுள்ள நிலையில் இந்த 5-வது வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி துஷார் நிச்சயமாக இந்தப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட உள்ள நிலையில் இரண்டாவது எவிக்ஷன் நடைபெறும் என்றால் அது ரம்யா ஜோ அல்லது பிரவீன் ராஜ் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இது வார இறுதி எபிசோடில் உறுதியாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஊதித் தள்ள நான் ஒன்னும் மண்ணு இல்லை… மலை – வெளியானது துல்கர் சல்மானின் காந்தா பட ட்ரெய்லர்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day33 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/QrwtpQtNkb
— Vijay Television (@vijaytelevision) November 8, 2025
Also Read… ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தை நிராகரித்த பிரபல நடிகர்? வைரலாகும் தகவல்