Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆடியன்ஸ்கு கோவம் வருது… பிக்பாஸில் திவ்யாவிடம் சண்டைக்கு நிக்கும் துஷார் – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வாயை கூட திறந்து பேசாத போட்டியாளர்களை கடந்த வாரம் விஜய் சேதுபதி ஆடியன்ஸ் நீங்க எல்லாம் என்று கிண்டலடித்தது அந்த எபிசோடை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

ஆடியன்ஸ்கு கோவம் வருது… பிக்பாஸில் திவ்யாவிடம் சண்டைக்கு நிக்கும் துஷார் – வைரலாகும் வீடியோ
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2025 11:14 AM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி (Bigg Boss Tamil Season 9) தொடங்கி தற்போது 4 வாரங்கள் முடிவடைந்து 5-வது வாரம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களாக உள்ளே சென்றவர்கள் விளையாட்டு சரியாக மக்களை மகிழ்விக்கும் விதமாக இல்லை என்பதை நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி வாரம் வாரம் வரும் போது எல்லாம் சொல்லியும் அதனை போட்டியாளர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் நினைப்பதையே செய்துகொண்டு இருந்தனர். இதனையும் விஜய் சேதுபதி குறிப்பிட்டு சொல்லியும் அவர்கள் மாறுவது போல தெரியவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் 4-வது வார இறுதியில் 4 வைல்கார்ட் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே வீட்டில் உள்ளவர்களிடையே சற்று சலசலப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு சீசனிலுமே வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததும் நிகழ்ச்சியும் ஆட்டம் மாறுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் இந்த சீசனிலும் அப்படித்தான். தொடர்ந்து கடந்த வார இறுதியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அரோரா மற்றும் துஷார் இருவரும் ஆடியன்ஸ் போல வீட்டில் எந்த விசயத்திலும் கலந்துகொள்ளாமல் இருந்ததை விஜய் சேதுபதி நேரடியாகவே கிண்டலடித்தார். இதனைத் தொடர்ந்து அவர்கள் பிக்பாஸில் தங்களது விளையாட்டை ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வீட்டில் வைல்கார்ட் போட்டியாளர்களிடையே விதண்டாவாதத்திற்கு அரோரா மற்றும் துஷார் இருவரும் சண்டை போடுவது போல நிற்கிறார்கள்.

பிக்பாஸில் திவ்யாவிடம் சண்டைக்கு நிக்கும் துஷார்:

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியுள்ளது. இந்த ஹோட்டல் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் பணியாளர்களாக மாற வெளியே இருந்து முந்தைய சீசன்களின் போட்டியாளர்களான பிரியங்கா, தீபக் மற்றும் மஞ்சரி ஆகிய மூன்று பேரும் விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

நேற்றைய எபிசோட் கலகலப்பாக சென்ற நிலையில் இன்று ஆஹா ஓஹோ ஹோட்டலின் மேனேஜரான திவ்யாவை அழைத்து ஹோட்டலில் சர்வீஸ் சரியில்லை என்று தீபம் மற்றும் மஞ்சரி புகார் கூற மற்ற போட்டியாளர்களை அழைத்து டாஸ்கில் விரைவில் ஈடுபட திவ்யா அறிவுறுத்துகிறார். ஆனால், அவரிடம் நான் செய்ய முடியாது என்று துஷார் சண்டையிடுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆடியன்ஸ்கு கோவம் வருது என்று கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.

Also Read… லாங் ட்ரைவ் போலாமா மாமாகுட்டி… லவ் டுடே வெளியாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது அடி அலையே பாடலின் ப்ரோமோ வீடியோ