Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Retta Thala Movie: பிரதீப் ரங்கநாதனுடன் மோதும் அருண் விஜய்.. ‘ரெட்ட தல’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Retta Thala vs Love Insurance Kompany: நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் இட்லி கடை. தனுஷின் இப்படத்தில் அதிரடி வில்லனாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவரின் முன்னணி நடிப்பில் தயாராகிவந்த படம் ரெட்ட தல. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Retta Thala Movie: பிரதீப் ரங்கநாதனுடன் மோதும் அருண் விஜய்.. ‘ரெட்ட தல’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் ரெட்ட தல Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2025 18:01 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் அருண் விஜய் (Arun Vijay). இவர் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக இட்லி கடை (Idli kadai) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. நடிகர் தனுஷ் இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடித்திருந்த அஸ்வின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்ததாக இவரின் நடிப்பில் மாறுபட்ட ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகிவந்த படம்தான் ரெட்ட தல (Retta Thala). இப்படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் (Kris Thirukumaran) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை BTG யுனிவர்சல் பேனர் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் (Sam CS) இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி (Siddhi Idnani) நடித்துள்ளார். இப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படமானது வரும் 2025 டிசம்பர் 18ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: யூடியூப்பரை எதிர்த்து கௌரி ஜி கிஷனின் தைரியமான பதில்.. ஆதரவு தெரிவித்த குஷ்பு – சின்மயி!

ரெட்ட தல படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட அருண் விஜய் :

பிரதீப் ரங்கநாதனுடன் மோதும் அருண் விஜய் :

நடிகர் அருண் விஜயின் இந்த ரெட்ட தல படமானது டிசம்பர் 18ம் தேதியில் வெளியாகும் நிலையில், அதே தேதியில்தான் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் பிரதீப் ரங்ககநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்ஜே. சூர்யா மற்றும் கௌரி ஜி கிஷன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துளளனர்.

இதையும் படிங்க: யார் உங்களுக்கானவர்? ராஷ்மிகா மந்தனாவின் தி கேர்ள்ஃபிரண்ட் பட விமர்சனங்கள் இதோ!

இந்த படமானது கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகையோடு வெளியாகவிருந்த நிலையில், டியூட் படம் வெளியான காரணத்தினால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதனின் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம், அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்துடன் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த இரு திரைப்படத்தில் எந்த திரைப்படம் வெற்றிபெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.