Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Retta Thala Movie: தனுஷின் குரலில்.. அருண் விஜயின் ‘ரெட்ட தல’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல்!

Retta Thala First Single: நடிகர் அருண் விஜய் மற்றும் சித்தி இத்னானியின் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ரெட்ட தல. இப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் நிலையில், சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ரெட்ட தலபடத்தின் முதல் பாடலான கண்ணம்மா லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.

Retta Thala Movie: தனுஷின் குரலில்.. அருண் விஜயின் ‘ரெட்ட தல’ படத்திலிருந்து வெளியான முதல் பாடல்!
ரெட்ட தல படத்தின் முதல் பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Sep 2025 18:56 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் அருண் விஜய் (Arun Vijay). இவரின் முன்னணி நடிப்பில் பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவர் தனுஷ் (Dhanush) இயக்கத்தில் இட்லி கடை (Idli Kadai) படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  இந்த படமானது முழுவதும் குடும்ப கதைக்களத்துடன் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு முன்னே அருண் விஜயின் நடிப்பில் தயாராகிவந்த படம்தான் ரெட்ட தல. இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநரான கிரிஷ் திருக்குமரன் (Kris Thirukumaran) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான கெத்து என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தை அடுத்ததாக அருண் விஜயின் நடிப்பில் இந்த ரெட்ட தல படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் அருண் விஜய் ஆக்ஷன் வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. “கண்ணம்மா” (Kannamma) என்ற லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : கவினுக்கு ‘கிஸ்’ படம் வெற்றியை கொடுக்குமா? விமர்சனம் இதோ!

ரெட்ட தல படக்குழு வெளியிட்ட முதல் பாடல் பதிவு :

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை, பி.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த ரெட்ட தல படமானது கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் படப்பிடிப்பு ஆரம்பமானது.

இதையும் படிங்க : ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!

இதை அடுத்ததாக இப்படத்தின் ஷூட்டிங் சில பிரச்னைகளின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரியுடன் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இதை தொடர்ந்து இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை “டி சீரிஸ்” நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரெட்ட தல படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்த ரெட்ட தல படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் இந்த தீபாவளிக்கு சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக படக்குழு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.