Samantha: பேமிலி மேன் சீரிஸ் இயக்குநரை காதலிப்பதை உறுதிப்படுத்திய சமந்தா? வைரலாகும் பதிவு!
Samantha And Raj Nidimoru: சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சமந்தா. இவரின் நடிப்பில், மா இன்டி பங்காரம் என்ற படமானது உருவாகிவருகிறது. இந்நிலையில் இவர் சமீபத்தில் வாசனை திரவியம் கடை திறந்திருந்த நிலையில், அது தொடர்பான பதிவை வெளியிட்டிருந்தார். அதில் பிரபல இயக்குநருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu), தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக எந்த திரைப்படங்களும் வெளியாகாத நிலையில், தற்போது “மா இன்டி பங்காரம்” (Maa Inti Bangaram) என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியிருந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இதை அடுத்து சமீபத்தில் நடிகை சமந்தா ரூத் பிரபு, ” சீக்ரெட் அல்கெமிஸ்ட்” (Secret Alchemist) என்ற வாசனை திரவியம் தொடர்பான கடையை திறந்துள்ளார். இந்த படத்தின் தொடக்கவிழா சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் நடிகை தமன்னா (Tamanna) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த கடை திறப்பு விழா தொடர்பாக சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில் அவர் இயக்குநர் ராஜ் நிதிமோருவுடன் (Raj Nithi Moru) நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தய்யும் பகிர்ந்துள்ளார். இந்த நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இவர்கள் இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்யும் விதமாக இருக்கிறது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ஒருத்தருக்கா கொடுத்தான்… இல்லை ஊருக்காக கொடுத்தான் – வெளியானது கவினின் மாஸ் படத்தின் ட்ரெய்லர்
தனது கடை திறப்பு விழா குறித்து சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் 8வது இருக்கும் புகைப்படத்தில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ் நிதிமோருவுவை கட்டியணைத்தபடி சமந்தா இருக்கும் விதத்தில் உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் உண்மையாகவே காதலித்துவருகிறார்களா? என்றும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
கடந்த சில மாதங்களாக சமந்தா நிகழ்ச்சியாக இருக்கட்டும், சமந்தாவின் பயணங்களாக இருக்கட்டும், இது தொடர்பாக அவர் பகிர்ந்த புகைப்படங்களில் இயக்குநர் ராஜ் நிதிமோருவும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளார். இது இணையத்தில் தொடர்ந்து ஒரு விவாத பொருளாக இருந்த நிலையில், சமீபத்தில் சமந்தா கட்டியணைத்தபடியாக இருக்கும் புகைப்படம் இவர்களின் காதலை உறுதிசெய்துள்ளது. ஆனால் இது குறித்து இவர்கள் இருவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா ரூத் பிரபுவின் படம் :
நடிகை சமந்தாவின் நடிப்பில் தற்போது “மா இன்டி பங்காரம்” என்ற படமானது தயாராகிவருகிறது. இப்படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிவருகிறார். இவர்களின் கூட்டணி ஏற்கனவே ஓ பேபி என்ற திரைப்படத்தில் இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டான நிலையில், மேலும் மீண்டும் 2வது முறையாக சமந்தா மற்றும் நந்தினி ரெட்டியின் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படமானது முழுக்க அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளுடன் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.