Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸில் வீட்டு தல டாஸ்கின் போது காயமடைந்த பார்வதி – வைரலாகும் வீடியோ!

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த 6-வது வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் இன்று நடைபெறுகிறது. அதில் பார்வதிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு வீங்கி இருப்பது போல வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

பிக்பாஸில் வீட்டு தல டாஸ்கின் போது காயமடைந்த பார்வதி – வைரலாகும் வீடியோ!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2025 12:52 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த 5-வது வாரத்தில் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி பிக்பாஸ் வீடு ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறிய நிலையில் வீட்டில் உள்ள மொத்த போட்டியாளர்களும் ஹோட்டல் பணியாளர்களாக மாறினர். இந்த முறை முன்னாள் சீசன் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா மற்றும் மஞ்சரி ஆகியோர் விருந்தினர்களாக ஆஹா ஓஹோ ஹோட்டலுக்கு வந்தனர். இவர்களை சந்தோசப்படுத்தி இவர்களிடம் இருந்து ஸ்டார் வாங்கவேண்டும் என்பது வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு டாஸ்க். இந்த நிலையில் ஒவ்வொருவரும் அவர்களின் பணிகளை செய்து வந்துள்ள விருந்தினர்களை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதில் டாஸ்கில் சிறபாக பங்கேற்ற நபர்கள் மற்றும் வாரம் முழுவதும் வீட்டில் சிறபாக பங்கேற்ற நபர்களை தேர்வு செய்து இந்த வாரத்திற்கான தல டாஸ்க் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் 5-வது வார இறுதியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்றது. அதில் துஷார் சனி கிழமையும் பிரவீன் ராஜ் ஞாயிற்று கிழமையும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் தற்போது பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 17 போட்டியாளர்கள் மிச்சம் உள்ளனர். இதில் கடந்த வாரத்தில் வீட்டு தலையாக இருந்த திவ்யா மற்றும் சிறப்பாக பங்காற்றிய நபர்களாக வீட்டில் உள்ள மற்றப் போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபரி மற்றும் பார்வதி ஆகிய மூன்று பேரும் இன்று இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்கில் பங்கேற்கின்றனர்.

வீட்டு தல டாஸ்க் விளையாடி காயமடைந்த பார்வதி:

அதன்படி முதலாவதாக இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டு தலைக்கான டாஸ்கில் திவ்யா, பார்வதி மற்றும் சபரி ஆகியோர் பங்கேற்ற வீடியோ வெளியானது. அதில் சபரியை பார்வதி தள்ளி விட உடனே சபரியும் பார்வதியை தள்ளிவிடுகிறார். இதனால் பார்வதி கீழே விழுவது போல காட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக வெளியான புரோமோ வீடியோவில் கீழே விழுந்த பார்வதிக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஒருத்தருக்கா கொடுத்தான்… இல்லை ஊருக்காக கொடுத்தான் – வெளியானது கவினின் மாஸ் படத்தின் ட்ரெய்லர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்