கீதா கைலாசத்தின் வித்யாசமான நடிப்பில்… அங்கம்மாள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
Angammal Movie Teaser : தமிழ் சினிமாவில் பலப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கீதா கைலாசம். இவர் முன்னணி வேடத்தில் நடித்துள்ள அங்கம்மாள். இந்தப் படத்தின் டீசரைப் விஜய் சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை கீதா கைலாசம். இவர் கடந்த 2021-ம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பாட்ட பரம்பரை படத்தில் நடிகர் பசுபதியின் மனைவியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதில் இவர்களின் காட்சி தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை கீதா கைலாசம் நடிப்பில் வெளியான வீட்ல விஷேசம், நட்சத்திரம் நகர்கிறது, வெந்து தணிந்தது காடு, மாமன்னன், லவ்வர், ஸ்டார், லப்பர் பந்து, டியர், ராயன், அமரன், மெட்ராஸ்காரன், மாமன், மெட்ராஸ் மேட்னி, இட்லி கடை என தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. எமோஷ்னல், காமெடி என பல விதமான கதாபபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தப் பிடித்தார்.
இறுதியாக நடிகர் தனுஷ் எழுதி இயக்கி நடித்த இட்லி கடை படத்தில் தனுஷின் அம்மாவாக நடிகை கீதா கைலாசம் நடித்து இருந்தார். அதன்படி ராஜ்கிரனுக்கு ஜோடியாக நடிகை கீதா கைலாசம் நடிப்பில் அசத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கீதா கைலாசம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.




அங்கம்மாள் படத்தின் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி:
இந்தப் படத்தை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி உள்ளார். இதில் கீதா கைலாசம் உடன் இணைந்து நடிகர்கள் சரண் சக்தி, தென்றல் ரகுநாதன், பரணி, யாஸ்மின், முல்லையரசி, வினோத் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற நவம்பர் மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Launching the teaser of #Angammal is out now!
Best wishes to the team
🔗: https://t.co/QOM1lTEhQG@stonebenchers @kaarthekeyens @karthiksubbaraj @kailasam_geetha @perumal_murugan @ActorSarann @ActorBharani @mullai_actress @msarundas @AnjoySamuel @NjoyFilms @ashand_vegaz… pic.twitter.com/tweaoZRUJo
— VijaySethupathi (@VijaySethuOffl) November 8, 2025
Also Read… பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே பாடலின் ரிகர்சல் வீடியோ வெளியானது!