பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே பாடலின் ரிகர்சல் வீடியோ வெளியானது!
Adi Alaye Song Lyrical Video | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தில் இருந்து முதல் சிங்கிளான அடி அலையே சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியான மதராஸி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படமும் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 100 கோடி வசூலில் இடம் பிடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்துள்ள படம் பராசக்தி. இந்தப் படத்திற்கான கூட்டணி குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் இந்த பராசக்தி படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா முரளி, ராணா டகுபதி, பேசில் ஜோசஃப் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.




அடி அலையே பாடலின் ரிகர்சல் வீடியோ வெளியானது:
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மேலும் இது ஜிவி பிரகாஷின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அடி அலையே பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அந்த பாடலின் ரிகர்சல் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… Dulquer Salmaan: எனது கேரியரில் ஸ்பெஷல் திரைப்படம் காந்தா.. நெகிழ்ச்சியாக பேசிய துல்கர் சல்மான்!
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
5 Million+ views for Adi Alaye from #Parasakthi ❤️🔥
And here’s a BTS video from what happened during the making of the love song
A @gvprakash musical 🎶
Sung by @talktodhee and @RSeanRoldan 🎙️Streaming here 🔗- https://t.co/X43GCiAMGO#ParasakthiFromPongal… pic.twitter.com/kEYi5RhnBn
— DawnPictures (@DawnPicturesOff) November 8, 2025
Also Read… பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கை சிறப்பாக செய்த சாண்ட்ரா… கண்ணீர் விட்ட விக்கல்ஸ் விக்ரம்