Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தலைவன் தலைவி சூப்பர் ஹிட்.. பாண்டிராஜின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா?

Pandiraajs Next Movie: இயக்குநர் பாண்டிராஜ் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது குடும்பப் படங்கள்தான். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக தலைவன் தலைவி படமானது வெளியானது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, மேலும் இளம் நடிகர் ஒருவரை வைத்து படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது யார் என்பது பற்றி பார்க்கலாம்.

தலைவன் தலைவி சூப்பர் ஹிட்.. பாண்டிராஜின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தானா?
பாண்டிராஜின் புதிய படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Nov 2025 21:30 PM IST

கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகி சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalavii). இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கியிருந்த நிலையில், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் நித்யா மேனன் (Nithya Menen) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்னை, குடும்ப தகராறால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருந்தது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் ஜோடியானது மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, புதிய படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள இணையத்தில் கசிந்துவருகிறது. இவரின் இயக்கத்தில் தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட் தொடர்பான படங்கள் வெளியாகிவரும் நிலையில், இந்த புதிய திரைப்படமும் அதுபோன்ற கதைக்களத்தில் உருவாகவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தில் இரு நடிகர்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) முதன்மை நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: துல்கர் சல்மானின் காந்தா படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்… வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

நடிகர் ஹாரிஸ் கல்யாணின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பாண்டிராஜ் கூட்டணி :

நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் இறுதியாக டீசல் என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் HK15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவருகிறார். இதை இயக்குநர் வினீத் வரப்ரசாத் இயக்கிவருகிறார்.

இதையும் படிங்க : மக்கள் செல்வனுடன் புதிய படத்திற்காக இணையும் மணிரத்னம்.. நாயகி இவரா?

இப்படமானது முழுக்க ஆக்ஷன் நிறைந்த கதைக்களத்துடன் தயாராகிவருகிறது. இதில் இளம் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்தக்கதான் பாண்டிராஜ் மற்றும் ஹரிஷ் கல்யாணின் கூட்டணி திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இரு நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளதக் கூறப்படும் நிலையில், அடுத்த நடிகர் யார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷ்ன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.