Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துல்கர் சல்மானின் காந்தா படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்… வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

Kaantha Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவரின் பிரம்மாண்ட நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் படம் காந்தா. இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

துல்கர் சல்மானின் காந்தா படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்… வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 05 Nov 2025 16:57 PM IST

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் இதுவரை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் பிரம்மாண்ட நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் காந்தா (Kaantha). இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்க, துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் துல்கருடன் நடிகர் ராணாவும் (Rana Daggubati) இணைந்து தயாரித்திருக்கிறார். மேலும் இவர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த காந்தா படமானது கடந்த 1960ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படமானது வரும் 2025 நவம்பர் 14-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது. அது வேறு எந்த நிறுவனமும் இல்லை, ஏ.ஜி.எஸ். சினிமாஸ்தான் (AGS Cinemas). இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ’டிஎன்ஏவில் நிரூபிக்கப்பட்டால் குழந்தையை கவனிப்பேன்’ – மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்ட பரபர அறிக்கை!

துல்கர் சல்மானின் காந்தா படத்தின் தமிழகம் ரிலீஸ் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்பான அறிவிப்பு பதிவு:

நடிகர் துல்கர் சல்மானின் இந்த காந்தா படமானது தமிழ் மக்களிடையே இந்த 2025ம் ஆனதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இதில் பல சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிபூர்வமான கதைக்களங்களுடன் உருவாகியிருக்கும் நிலையில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகிறது.

காந்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய நிறுவனம் :

பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் ஒரு பழமையான கதைக்களத்தில் இந்த காந்தா வெளியாகவுள்ளது. இப்படம் முழுமையாக 60 காலகட்டத்தில் நடந்த கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்… சரத்குமார் பாராட்டு

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், சில மாதங்களில் நிறைவடைந்து, தற்போது வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாம். சுமார் ரூ 30 முதல் 40 கோடிகளுக்கு இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கியதாக கூறப்படுகிறது.