Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினிகாந்த – கமல்ஹாசனின் கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Kamal Haasan With Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 173-வது படத்தை நடிகர் கமல் ஹாசன் தயாரிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த – கமல்ஹாசனின் கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…
ரஜினிகாந்த - கமல்ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2025 21:16 PM IST

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து நடித்து வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் கமல் ஹாசன் (Kamal Haasan). வருடத்திற்கு ஒரு முறையாவது இவர்களின் படங்கள் திரையரங்குகளில் நிச்சயமாக வெளியாகிறது. தமிழ் சினிமாவில் நாயகனாக நடிகர் கமல் ஹாசன் கலக்கி வந்த காலத்தில் தான் துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். வெள்ளையாக இருந்தால் தான் நாயகன் என்ற தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய நடிகர்களின் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவரு. கமல் ஹாசனின் படங்களில் துணை வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கமல் ஹாசனின் போட்டி நாயகனாக மாறினார் நடிகர் ரஜினிகாந்த். கமல் ஹாசனை உலக நாயகன் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினர்.

ஆரம்ப காலகட்டத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து வந்த நிலையில் நாயகன்களாக போட்டிப்போட தொடங்கிய பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. என்னதான் இவர்களின் ரசிகர்களிடையே போட்டி இருந்தாலும் இந்த கூட்டணி மீண்டும் திரையில் பார்க்க விருப்பம் இருப்பதையும் அவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீப காலமாக நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து ஒன்றாக நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது.

ரஜினி – கமல் கூட்டணி குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இவர்களின் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் காத்திருந்த இந்த நேரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. ரஜினிகாந்தின் 173-வது படத்தை நடிகர் கமல் ஹாசன் அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் தற்போது அவரது நடிப்பில் 172-வது படமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில் 173-வது படத்தை கமல் ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற அருணாச்சலம் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also read… மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்… சரத்குமார் பாராட்டு

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also read… நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரோஜா… வாழ்த்தும் பிரபலங்கள்