Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Suriya46: சூர்யா46 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்.. இத்தனை கோடியா?

Suriya46 Digital Rights: தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தனது காலடியை பதித்துவருபவர் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் உருமாகிவரும் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படம்தான் சூர்யா46. இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைவதற்கு முன்னே நெட்பிளிக்ஸ் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளது.

Suriya46: சூர்யா46 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்.. இத்தனை கோடியா?
சூர்யா46 திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Nov 2025 19:24 PM IST

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 44 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இதில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இந்த படமானது எதிர்பார்ப்புகளை கடந்து சுமார் ரூ 230 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதை அடுத்ததாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji)இயக்கத்தில் கருப்பு (Karuppu) படத்தில் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்திருக்கும் நிலையில், வெளியீட்டிற்கு மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. அந்த வகையில் தமிழ் இயக்குநர்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குநரான வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம்தான் சூர்யா46 (Suriya46).

இது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைவதற்கு முன்னே இப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. இது எத்தனை கோடிகளுக்கு வாங்கியுள்ளது தெரியுமா? இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் (Netflix) சுமார் ரூ 85 கோடிகளை கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : பைசன் படத்தில் அனுபமாவுக்கும் துருவுக்கும் வயது வித்தியாசத்துக்கு காரணம் இதுதான் – மாரி செல்வராஜ்!

சூர்யாவின் 46வது படத்தை பற்றி சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

சூர்யா46 திரைப்படத்தின் நிலை என்ன :

நடிகர் சூர்யாவின் 46-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துவருகிறார். இவர்களுக்கு இடையே சுமார் 23 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. அதை தொடர்ந்து வெளி நாடிகளில் இப்படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இப்படம் ஒரு பக்க தெலுங்கு மற்றும் ஃபாரின் கலந்த வித்தியாசமான திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: 129 அறுவை சிகிச்சைகள்… சினிமா நடிகன் என்பதால் என நினைக்கிறார்கள் – அஜித் குமார் ஓபன் டாக்

இதில் சூர்யா ஒரு வெளிநாட்டில் வாழும் தெலுங்கு நபராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி, “இப்படத்தின் ஷூட்டிங் 50 சதவீதம் நிறைவடைந்ததகவும், இந்த சூர்யா46 படம் ஒரு பேமிலி என்டர்டெயினர் படமாக உருவாகுவதாகவும் மற்றும் நிச்சயமாக பேமிலி பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.