நாளை மாலை மாஸ்க் படத்தின் ஆடியோ லாஞ்ச்… ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு!
Mask Movie Audio launch: நடிகர்கள் கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மையா முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் மாஸ்க். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின் (Actor Kavin). இளம் தலைமுறை நடிகர்களில் தொடர்ந்து ஹிட் அடித்து வரும் நிலையில் அந்த வரிசையில் கவினும் உள்ளார். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கவினின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கிஸ் படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சதீஸ் இயக்கி இருந்தார். இவர் டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் வலம் வந்த நிலையில் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் தற்போது நடித்து வரும் படம் மாஸ்க். இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வரும் நடிகர் கவின் ஹாய் என்ற படத்தின் மூலம் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வரும் கவின் தற்போது மாஸ்க் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. சமீபத்தில் வெளியான முதல் சிங்கிள் வீடியோ ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




மாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது:
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மிகவும் பிரமாண்டமாக ஸ்ரீ முத்த வெங்கடசுப்பா ராவ் கச்சேரி அரங்கத்தில் நடைபெறும் என்று நடிகை ஆண்ட்ரியா அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Get ready for a GRAND EVENING 🌟#MASK – Audio launch tomorrow at 6PM, at the Mutha Venkatasubba Rao Concert Hall (Lady Andal).
A @gvprakash musical, in cinemas from November 21st!#MaskingNov21 @BlackMadras1 @Kavin_m_0431 @andrea_jeremiah @tsmgo_official @vikarnan16… pic.twitter.com/VdTb1qyoSS
— Andrea Jeremiah (@andrea_jeremiah) November 8, 2025
Also Read… பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே பாடலின் ரிகர்சல் வீடியோ வெளியானது!