Siddharth: டக்கர் பட இயக்குநருடன் மீண்டும் இணைந்த சித்தார்த்.. வெளியானது புதிய படத்தின் டைட்டில்!
Siddharth - Karthik G Krishs New Movie: தென்னிந்திய சினிமாவில் மக்களிடையே பிரபலமாக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவரின் நடிப்பில் இறுதியாக 3BHK படமானது வெளியான நிலையில், அதை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றி விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சித்தார்த் (Siddharth). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியிருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இவரின் நடிப்பில் வெளியான படங்கள் எந்தவித வரவேற்புகளையும் பெறவில்லை. அந்த சமயத்தில் இவருக்கு ரீ-எண்டரி கொடுக்கும் விதத்தில் அமைந்த படம்தான் சித்தா (Chiththaa). இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்களிடையே கவனிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி, மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவந்த திரைப்படம்தான் 3BHK. இந்த படத்தில் இவருடன் நடிகர் சரத்குமார் (Sarathkumar) முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக சித்தார்த்தின் நடிப்பில் புதியதாக படங்கள் உருவாகிவந்தது.
அதில் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் (Karthik G Krish) இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் மற்றும் சித்தார்த் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு படக்குழு “ரவுடி அண்ட் கோ” (Rowdy And Co) என்ற டைட்டிலை வைத்துள்ளது.




இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுடன் மோதும் அருண் விஜய்.. ‘ரெட்ட தல’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சித்தார்த்தின் ரவுடி அண்ட் கோ படக்குழு வெளியிட்ட டைட்டில் போஸ்டர் :
Rules? Broken.
Limits? Crossed.
Mood? Rowdy Mode ON!Title look of #Siddharth‘s #RowdyAndCo 👊🏻🔥
Directed by @Karthik_G_Krish @sudhans2017 @revaamusic @aravinndsingh @KSamy1878915 @PradeepERagav @Sureshchandraa @tuneyjohn @PharsFilm @abdulnassaroffl @donechannel1 pic.twitter.com/ei5eedFtlQ
— Passion Studios (@PassionStudios_) November 8, 2025
இந்த படத்தை இயக்கும் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ், ஏற்கனவே சித்தார்த்தின் நடிப்பில் வெளியான டக்கர் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
இந்நிலையில், அந்த படத்தை அடுத்ததாக மீண்டும் சித்தார்த்துடன் 2வது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டூடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரேவா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
சித்தார்த்தின் புதிய படங்கள் :
நடிகர் சித்தார்த்தின் இந்த ரவுடி அண்ட் கோ திரைப்படத்தை அடுத்ததாக இயக்குநர் எஸ் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பாதி ஷூட்டிங் இந்தியன் 2 படத்தின்போதே எடுக்கப்பட்ட நிலையில் மீதி ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இந்தியன் 2 படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்ற நிலையில், இந்தியன் 3 படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.