Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிக்பாஸ் 9-ல் முதன்முறையா குறும்படம்… யோசனையில் போட்டியாளர்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தற்போது 5 வாரங்கள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த சீசன் தொடங்கியதில் இருந்து இன்று தான் முதன் முறையாக பிக்பாஸில் குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் 9-ல் முதன்முறையா குறும்படம்… யோசனையில் போட்டியாளர்கள் – உற்சாகத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Nov 2025 19:21 PM IST

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து ரசிகர்களிடையே மிகவும் பிடித்தமான ஒன்று குறும்படம். அந்த குறுப்படம் என்பது எதற்காக போடப்படும் என்றால் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு விசயத்தை செய்துவிட்டு அதனை மாற்றிப் பேசுவது அல்லது அதனைப் அப்படி எதுவும் செய்யவில்லை என்று கூறுபவர்களுக்கு வீடியோவைப் போட்டுக்காட்டி அதனை நிரூப்பிப்பார்கள். இதனைக் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் போது பிக்பாஸில் குறும்படம் என்று பெயர் வைத்தார். இந்த குறும்படம் என்பது முதல் சீசனில் ஓவியா சொல்லாத ஒன்றை சொன்னதாக ஜூலி கூறியபோது அதனை அவர் கூறவில்லை என்று குறும்படம் போடப்பட்டது. இது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சீசனிலும் குறும்படம் போடப்படுவது வழக்கமாகி வருகின்றது.

அதன்படி வெளியே உள்ள மக்களுக்கு தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதால் என்ன நடக்கிறது என்பதில் தெளிவு இருக்கும். ஆனால் உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு இந்த குறும்படம் என்பது பல தெளிவுகளைக் கொடுக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து இன்றுடன் 35-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை குறும்படம் எதுவும் போடப்படாத நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் குறும்படம் ஒளிபரப்பப்பட உள்ளதாக ப்ரோமோ வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் 9-ல் முதன்முறையா குறும்படம்:

அதன்படி இன்று குறும்படம் என்னவாக இருக்கும் என்று விஜய் சேதுபதி கேள்வி எழுப்பிய போது உள்ளே உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு விசயத்தை கூறுகிறார்கள். ஆனால் கடந்த வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சாண்ட்ராவிற்கு பிக்பாஸ் கொடுத்த சீக்ரெட் டாஸ்கைதான் இன்று குறும்படமாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஒருத்தருக்கா கொடுத்தான்… இல்லை ஊருக்காக கொடுத்தான் – வெளியானது கவினின் மாஸ் படத்தின் ட்ரெய்லர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்