Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தவறாக புரிந்துகொண்ட கேள்வி.. கௌரி கிஷனின் எடை குறித்த கேள்விக்கு மன்னிப்பு கேட்ட யூடியூபர்!

Gauri G Kishan Weight Controversy: சமீப நாட்களாகவே இணையத்தில் பிரபலமாக பேசப்பட்டுவரும் நிகழ்வுதான் நடிகை கௌரி ஜி கிஷனின் செய்தியாளர்கள் சந்திப்பு விவகாரம். இதில் யூடியூபர் ஒருவர் இவரின் எடை குறித்து கேள்வி கேட்டதாக சர்ச்சை வெடித்திருந்தது. இந்நிலையில் அந்த யூடியூபர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்

தவறாக புரிந்துகொண்ட கேள்வி.. கௌரி கிஷனின் எடை குறித்த கேள்விக்கு மன்னிப்பு கேட்ட யூடியூபர்!
ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் கௌரி ஜி கிஷன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Nov 2025 17:04 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கௌரி ஜி கிஷன் (Gauri G Kishan). இவர் தமிழில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான 96 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் நடிகை திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி சினிமாவில் நல்ல வரவேற்புகள் கிடைத்திருந்தது. அந்த வகையில் இவர் தளபதி விஜயின் (Thalapathy Vijay) மாஸ்டர் (Mastar), கர்ணன் (Karnan) திரைப்படம் போன்ற படங்களிலும் இவர் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அதர்ஸ் (Others). இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கடந்த 2025 நவம்பர் 6ம் தேதியில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் பிரபல யூடியூபர் (YouTuber ) ஒருவர் கௌரி கிஷனிடம் அவரின் எடை (weight) குறித்தான கேள்வியை எழுப்பியிருந்தார்.

இது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பான சர்ச்சை பூகம்பமாக வெடித்திருந்தது. இதற்கு குஷ்பு, பாடகி சின்மயி என பல்வேறு பிரபலங்களும் கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். சினிமாவில் இந்த பிரச்னை பெரிதாகிய நிலையில், இதற்கு மன்னிப்பு கேட்டு அந்த யூடியூபர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹிட்.. வெற்றியைக் கொண்டாடிய காந்தாரா சாப்டர் 1 படக்குழு!

கௌரி ஜி கிஷனின் எடை தொடர்பான கேள்விக்கு மன்னிப்பு கேட்டு யூடியூபர்

அந்த வீடியோவில் யூடியூபர், “கௌரி கிஷனின் சம்பவம் தொடர்பாக சில நாட்களாக மன உளைச்சலில் இருக்கிறேன். நான் அவரிடம் ஒரு விதத்தில் கேள்வி கேட்டிருந்தேன், அவர் தவறாக புரிந்துகொண்டு என்னை திட்டிவிட்டார்கள். அதன் காரணமாக திருப்பி அவரிடம் வாக்குவாதம் செய்யும் விதத்தில் கேள்வி கேட்கவேண்டியதாகிவிட்டது. அந்த கேள்வி அவரிடம் ஜாலியாக கேட்கப்பட்டிருந்தது, அது அவரின் மனத்தை புண்படுத்தியிருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

இதையும் படிங்க: யூடியூப்பரை எதிர்த்து கௌரி ஜி கிஷனின் தைரியமான பதில்.. ஆதரவு தெரிவித்த குஷ்பு – சின்மயி!

எனக்கும் அவரின் மனதை நோகடிக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை. இந்த நிகழ்வால் அவருக்கு வருத்தம், மனக்காயம் ஏற்பட்டிருந்தாலும், மேலும் அவருக்காக பலரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள், ஆதலால் இந்த நிகழ்விற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” என அந்த யூடியூபர் வீடியோவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்த சம்பவம் குறித்து நடிகை கௌரி ஜி கிஷன் பகிர்ந்த பதிவு

இந்த பதிவில் நடிகை கௌரி ஜி கிஷன், அன்று நடந்த சம்பவம் குறித்தும், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் இதில் குறிப்பிட்டுளார். தற்போது இந்த பதிவும் இணையத்தில் வைரலாகபரவி வருகிறது.