சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் ரீ ரிலீஸாகும் எஜமான் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Yajaman Movie Re Release: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இவரது நடிப்பில் முன்னதாக வெளியான எஜமான் படத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 1993-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் எஜமான். ஆக்ஷன் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை மீனா இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஐஸ்வர்யா, எம்.என். நம்பியார், மனோரமா, விஜயகுமார், நெப்போலியன், கவுண்டமணி, செந்தில், பீலி சிவம், தளபதி தினேஷ், ராஜேஷ் பாபு, எஸ்.என்.லட்சுமி, ம. வரலட்சுமி, சந்தியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். எஜமான் படம் திரையரங்குகளில் வெளியாகி 32 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எம். சரவணன், எம்.பாலசுப்ரமணியம், எம்.எஸ். குகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ரீ ரிலீஸாகும் ரஜினிகாந்தின் எஜமான் படம்:
தென்னிந்திய சினிமாவில் சமீப காலமாக ரீ ரிலீஸ் என்ற கலாச்சாரம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிரபலங்களின் பிறந்த நாளில் அவர்களின் சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றது படக்குழு. அந்த வகையில் வருகின்ற 12-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது 75-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற எஜமான் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த செய்தி ரஜினிகாந்தின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஜமீன்தார் வீடாக மாறிய பிக்பாஸ் இல்லம்… இந்த வார டாஸ்க் இதுதான் – வைரலாகும் வீடியோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Yajaman — Re-Release in Theatres From December 12 2025🔥
Stars : Rajinikanth – Meena – Aishwarya
Music : Ilaiyaraaja (Mouna Ragam)
Direction : RV Udayakumar (Chinna Gounder)Superstar Birthday Special👑🐐!! pic.twitter.com/aTrqgXD8ku
— Saloon Kada Shanmugam (@saloon_kada) December 1, 2025
Also Read… வேள்பாரி நாவலை படமாக்க தயாராகும் இயக்குநர் சங்கர்… இணையத்தில் கசிந்த தகவல்