Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : ’எனது படத்திலேயே கம்பேக் கொடுப்பேன்’ நடிகர் ஸ்ரீ குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj About Actor Sri : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகவுள்ள படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், மாநகரம் பட நடிகர் ஸ்ரீயை மீண்டும் தனது படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வைப்பேன் எனக் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj : ’எனது படத்திலேயே கம்பேக் கொடுப்பேன்’ நடிகர் ஸ்ரீ குறித்து பேசிய லோகேஷ்  கனகராஜ்!
லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஸ்ரீImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 10 Aug 2025 12:22 PM

மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வரும் இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவும் படம் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமானது சுமார் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளதாம். இந்த படத்தில் முன்னணி வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜுடன், ரஜினி இணைந்த முதல் படமாகும் இந்த கூலி. இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து சுமார் 8 பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், படத்தில் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், மனநல பாதிப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் ஸ்ரீ (Actor Sri) குறித்துப் பேசியுள்ளார். அதில் அவர், நடிகர் ஸ்ரீயை தனது படத்தின் மூலமாகவே மீண்டும் கம்பேக் கொடுக்கவைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மதராஸி படத்தின் கதை இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!

நடிகர் ஸ்ரீ பற்றி லோகேஷ் கனகராஜ் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைப் பற்றிய பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து அவரிடம் நடிகர் ஸ்ரீ குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “ஸ்ரீ இப்போது நன்றாக இருக்கிறார். எல்லாருக்கும் ஒரு கஷ்டகாலம் வரும். ஆனால் ஸ்ரீ முன்பு இருந்ததற்கு, தற்போது நிறைய முன்னேறி இருக்கிறார். மீண்டும் சினிமாவிற்கு வரப்போகிறாரா அல்லது வேறு எதுவும் செய்யப்போகிறாரா என்பது ஸ்ரீயின் கையில் இருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளுக்குப் பின், அவர் நலமாகிவிட்டார் என தெரிந்தபிறகு, நடிக்க வேண்டும் என்றால் எனது படத்திலே அவரை நடிக்கவைப்பேன். நானே ஸ்ரீயை கம்பேக் கொடுக்கவைப்பேன், அதைத்தான் நான் செய்வேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிரடியாகப் பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மீண்டும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

லோகேஷ் மற்றும் ஸ்ரீயின் நட்பு :

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் மாநகரம். அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் கதைக்களத்துடன் கடந்த 2017ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷனும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு முன்னே நடிகர் ஸ்ரீயும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்திற்குப் பின் அவர்கள் இருவரும் வேறு எந்த படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.