Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Samantha Ruth Prabhu: மீண்டும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா?

Samantha Special Appearance In Movie :தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக, எந்த படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகும் தகவலின்படி, நடிகை சமந்தா மீண்டும் சிறப்புப் பாடல் ஒன்றிற்கு நடனமாடவுள்ளாராம். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Samantha Ruth Prabhu: மீண்டும் சிறப்புப் பாடலுக்கு நடனமாடும் சமந்தா.. எந்த படத்தில் தெரியுமா?
சமந்தா ரூத் பிரபுImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 09 Aug 2025 16:35 PM

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் என்றால் அது குஷி (Kushi). கடந்த 2023ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படமானது உலகமெங்கும் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை அடுத்ததாக சமந்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. மேலும் இவரின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு இந்தியில் வெப் தொடர் ஒன்று வெளியானது. மேலும் இதை அடுத்ததாக சமந்தா படங்களைத் தயாரிப்பதில் இறங்கிவிட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா 1 (Pushpa 1) படத்தில், ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு, சிறப்பு நடனமாடியிருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதை அடுத்ததாக தற்போது மீண்டும் ஒரு பாடலுக்கு, நடிகை சமந்தா சிறப்பு நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அது வேறு எந்த படமும் இல்லை, நடிகர் ராம் சரணின் (Ram Charan) நடிப்பில் உருவாகும் பெடி (Peddi) படத்தில்தான். ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விக்ரம் பிரபுவின் சிறை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

ராம் சரணுடன் சமந்தா திரைப்படம் :

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தெலுங்கு சினிமாவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி படம் பெடி. இந்த படத்தில் ராம் சரண் முன்னணி வேடத்தில் நடிக்க நடிகை, ஜான்வீ கபூர் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படமானது முற்றிலும் கிராமத்தது கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில்தான் நடிகை சமந்தா, சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் நடிகர் ராம் சரணுடன் ரங்கஸ்தலம் என்ற படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளார்.

இதையும் படிங்க : ஜன நாயகனுடன் மோதுகிறதா பிரபாஸின் தி ராஜா சாப்?

ஒருவேளை இந்த பெடி படத்திலும் இவர் இணைந்தால், ராம் சரணுடன் இணையும் 2வது படமாக இது இருக்கும். ஆனால் இந்த படத்தில் நடிகை சமந்தா நடனமாடவுள்ளதாகப் படக்குழு இதுவரை எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இந்த பெடி திரைப்படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.