Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சித்தார்த் மல்கோத்ரா – ஜான்வி கபூர் நடிப்பில் பரம் சுந்தரி படத்தின் டிரெய்லர் இதோ!

Param Sundari Movie Official Trailer | இந்தி சினிமாவில் பிரபல நடிகர்கள் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பரம் சுந்தரி. இந்தப் படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சித்தார்த் மல்கோத்ரா – ஜான்வி கபூர் நடிப்பில் பரம் சுந்தரி படத்தின் டிரெய்லர் இதோ!
பரம் சுந்தரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2025 18:48 PM

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா (Actor Sidharth Malhotra). இவரது நடிப்பில் இந்தி சினிமாவில் பல படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா தற்போது பரம் சுந்தரி என்றப் படத்தில் நடித்துள்ளார். இதில் இவர் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயரிப்பாளரான போனி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வாரிசு நடிகையாக வந்து பல விமர்சனங்களைக் கடந்து தற்போது தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இந்த நிலையில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள பரம் சுந்தரி படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜான்வி கபூர் உடன் இணைந்து நடிகர்கள் ரெஞ்சி பணிக்கர், சித்தார்த்த சங்கர், மன்ஜோத் சிங், சஞ்சய் கபூர், இனயத் வர்மா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் துஷார் ஜலோட்டா எழுதி இயக்கி உள்ளார். தொடர்ந்து மேடோக் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் தினேஷ் விஜன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் பரம் சுந்தரி படத்தின் ட்ரெய்லர்:

கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பரம் சுந்தரி படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படக்குழு படம் தொடர்பாக தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. மேலும் முன்னதாக படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சில காரணங்களால் தள்ளிபோய் தற்போது ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப் படத்தின் டைட்டில் முன்னதாக இந்தி சினிமாவில் வெளியான மிமி என்ற படத்தில் வெளியான பரம் சுந்தரி பாடலில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்ததாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இந்தப் பாடல் இணையத்தை தெரிக்கவிட்டப் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Dhruv Vikram : தெலுங்கு இயக்குநருடன் இணையும் துருவ் விக்ரம்..?

பரம் சுந்தரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ