Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Janhvi Kapoor : ’அம்மா ஒரு இளவரசி’.. ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் விதமாக உடை அணிந்த ஜான்வி!

Janhvi Kapoor Instagram Viral Post : தெலுங்கு மற்றும் இந்தி என இந்திய நடிகைகளில் ஒருவர்தான் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளான இவர், தனது அம்மா ஸ்ரீதேவியின் ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி பட ரீ- ரிலீஸை தொடர்ந்து, படத்தினை பிரதிபலிக்கும் வண்ணம் இருக்கும் உடை ஒன்றை அணிந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Janhvi Kapoor : ’அம்மா ஒரு இளவரசி’..  ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் விதமாக உடை அணிந்த ஜான்வி!
ஜான்வி கபூர்Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 12:55 PM

70ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் புகழ் பெற்ற  இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த இவர், தமிழ், தெலுங்கி மற்றும் இந்தி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருக்கிறார். தமிழில் இவர் “கந்தன் கருணை” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நாயகியாக நடித்து அசத்தியிருந்தார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மகள் பெயர் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான ஜான்வி கபூர், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஐவரும் விரைவில் தமிழ் சினிமாவில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப நாட்களாக நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது. வைரலாக அந்த பதிவில் நடிகை ஜான்வி கபூர் தனது அம்மா நடிகை ஸ்ரீதேவியின் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட உடை ஒன்றை வடிவமைத்து, அதை அணிந்தபடி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவின் கீழ் தனது தாய் ஸ்ரீதேவியைப் பற்றிப் புகழ்ந்தும் பேசியிருக்கிறார். தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவானது இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.

நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

இந்த பதிவில் நடிகை ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீ தேவியினை பற்றிப் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில் அவர் “தனது அம்மா ஒரு தேவதை இளவரசி மாதிரி உள்ளவர், மேலும் நிறைய ஜாலியானவர் மற்றும் ரொம்ப அழகானவர். இந்த சர்ப்ரைஸினை, இன்னும் திறமையான கைகளால் கொண்டுவந்திருக்க முடியாது, இன்றைய சினிமா பிரியர்களுக்கு “ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி “படம் ரீ- ரிலீஸ் பரிசு, இது நம் சமகால படங்களுக்கு ஒரு வெற்றியைத் தரும் ஒரு படமாக இந்த ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி படத்தை உணர்ந்தேன். அனைவருக்கும் நன்றி என்று நடிகை ஜான்வி கபூர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

நடிகை ஜான்வி கபூரின் புதிய திரைப்படம் :

நடிகை ஜான்வி கபூரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தேவாரா பார்ட் 1. இந்த படத்தில் நடிகர் ஜுனியர் என்டிஆர். உடன் ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். இப்படத்தைத் தெலுங்கு இயக்குநர் கொரட்டால சிவா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியில் பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் துஷார் ஜலோட்டா இயக்க, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா முன்னணி நாயகனாக நடித்து வருகிறார். இந்த பாலிவுட் படத்தை தொடர்ந்து நடிகர் ராம் சரனுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் பூச்சி பாபுசனா இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...