Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

AA22 x A06 : தங்கம் ஜொலிக்கும் வாள்.. அல்லு அர்ஜுனுக்கு ‘AA22 x A06’ படத்தில் ஜோடியாகும் தீபிகா படுகோன்!

Allu Arjun and Atlee Movie Update : இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் திரைப்படம் AA22 x A06 திரைப்படம். டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜுனின் நடிப்பில் ஹாலிவுடட் ரேஞ்சில் உருவாகும் இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

AA22 x A06 : தங்கம் ஜொலிக்கும் வாள்.. அல்லு அர்ஜுனுக்கு ‘AA22 x A06’ படத்தில் ஜோடியாகும் தீபிகா படுகோன்!
நடிகை தீபிகா படுகோன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 07 Jun 2025 11:32 AM

கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் அட்லீ (Atlee). இவர் ஆரம்பத்தில் இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதை தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு வெளியான ராஜா ராணி (Raja Rani)  என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜயை (Vijay)  வைத்து இரு திரைப்படங்கள் மற்றும் பாலிவுட் பிரபலம் ஷாருக்கானை (Shahrukh Khan) வைத்து ஒரு படம் என அடுத்தடுத்த பிரம்மாண்ட நடிகர்களின் படங்களை இயக்க தொடங்கினார். மேலும் இவரின் தயாரிப்பில் இறுதியாக இந்தியில் பேபி ஜான் என்ற படம் வெளியானது. தமிழில் விஜய்யின் நடிப்பில் வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் படம்தான் அது, அதில் நடிகர்கள் வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கியமான தோற்றத்தில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தெலுங்கு முன்னணி பிரபலம் அல்லு அர்ஜுனின் (Allu Arjun)  நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் AA22 x A06 .

இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்க, தமிழ் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அதை தொடர்ந்து இப்படத்திலிருந்து மேலும் ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் (Deepika Padukone)  இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

AA22 x A06 திரைப்படத்தில் இணைந்த தீபிகா படுகோன் :

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தில், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் முன்னணி கதாநாயகியாக இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை AA22 x A06 திரைப்பட குழு வெளியிட்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோன் , நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில், இது குறித்தான தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

புஷ்பா 2 திரைப்பட வெற்றி :

நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பான் இந்தியா வரை மிகப் பிரபலமான படம் புஷ்பா 2. இந்த படத்தைத் தெலுங்கு யக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2021ம் ஆண்டு வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் மிகப் பிரம்மாண்டமாக வெளியானது. கடந்த 2024, டிசம்பர் 5ம் தேதியில் வெளியான இப்படம் ஒட்டுமொத்தமாக உலகளாவிய வசூலில் சுமார் ரூ 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க
வைகாசி பௌர்ணமி எப்போது? - அந்நாளில் இதெல்லாம் கண்டிப்பா செய்யுங்க...
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி
எளிமையாக ஆவணங்களை PDF-ஆ மாத்தலாம் - கூகுள் டிரைவின் புதிய வசதி...
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!
மகனை நினைத்து நெகிழ்ச்சி.. சிம்ரன் வெளியிட்ட வீடியோ!...
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு...
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!
பென்ஸ் முழுவதும் லோகேஷின் கதை இல்லை- இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்!...
'கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை...' எடப்பாடி பழனிசாமி
'கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை...' எடப்பாடி பழனிசாமி...
விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் - மைக்கேல் கிளார்க்
விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் - மைக்கேல் கிளார்க்...
வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
வைகாசி விசாகம்.. திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!...
கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. நடந்தது என்ன?
கமல் படங்களை தவிர்த்த துல்கர் சல்மான்.. நடந்தது என்ன?...
முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?
முருகனுக்கு பன்னீர் அபிஷேகம்.. சென்னையில் இந்த கோயில் தெரியுமா?...
தனுஷின் குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா!
தனுஷின் குபேரா படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த நாகார்ஜுனா!...