Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhruv Vikram : தெலுங்கு இயக்குநருடன் இணையும் துருவ் விக்ரம்..?

Dhruv Vikram New Movie Update : தமிழ் சினிமாவில் இளம் நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர் துருவ் விக்ரம். தமிழில் பிரபல நடிகராக இருந்து வரும் இவர், தற்போது தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் படத்தில் இணைந்துள்ளாராம். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Dhruv Vikram : தெலுங்கு இயக்குநருடன் இணையும் துருவ் விக்ரம்..?
துருவ் விக்ரம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 11 Aug 2025 21:19 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் மகன் நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram). தனது தந்தையை போல, இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா (Adithya Varma) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக நுழைந்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து வர்மா, மகான் மற்றும் பைசன் (Bison) போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் இவரின் முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு கடத்திருக்கும் படம் பைசன். இயக்குநர் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படமானது வரும் 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இவர் தெலுங்கு பிரபல இயக்குநரான ரமேஷ் வர்மா ( Ramesh Varma) இயக்கத்தில், புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் பூஜை இன்று 2025 , ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் துருவ் விக்ரமுடன்,  நடிகைகள் கயாடு லோஹர், அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தெலுங்கு நடிகை கேதிகா சர்மா போன்ற நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்.. வெளியான அறிவிப்பு இதோ!

நடிகர் துருவ் விக்ரமின் லேட்டஸ்ட் போட்டோஷூட் :

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் பைசன். இதை பிரபல இயக்குநரான மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது முழுக்க கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும் நடிகை ராஜீஷா விஜயனும் இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2025, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதியில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மணிரத்னத்துடன் துருவ் விக்ரமின் புதிய படம் :

நடிகர் துருவ் விக்ரம், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்திலும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடிக்கப்போவதாகவும், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால இப்படத்தை பற்றியும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.