துல்கர் சல்மானின் காந்தா படத்தின் பாடலைப் பாராட்டிய நடிகர் ரவி மோகன்
Actor Ravi Mohan: நடிகர் ரவி மோகன் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பனிமலரே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது என்று பாராட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் உடன் இணைந்து நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வினய் ராய், யோகி பாபு, டி.ஜே. பானு, ஜான் கொக்கன், லால், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மனோ, வினோதினி வைத்தியநாதன், ரோகன் சிங், விவேக் ஆர் வெங்கட்ராம், ராஜ் ஐயப்பா, லிசி ஆண்டனி, வித்யுல்லேகா ராமன், ஸ்வேதா வெங்கிட், அப்துல் லீ, பிரவீன் குமார், காயத்திரி கிருஷ்ணன், சௌந்தர்யா சரவணன், ஆர்ஜே சாரு, பிரேம் ஜேக்கப் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.
படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ரவி மோகன் தற்போது கராத்தே பாபு, ஜீனி மற்றும் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கராத்தே பாபு மற்றும் ஜீனி ஆகிய படங்களில் நடிகர் ரவி மோகன் நாயகனாக நடித்துள்ளார். பராசக்தி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனகாக நடிக்க நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். இதில் கராத்தே பாபு மற்றும் ஜீனி படங்கள் இந்த 2025-ம் ஆண்டே திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




காந்தா படத்தின் பனிமலரே பாடலை பாராட்டிய ரவி மோகன்:
இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் தற்போது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தின் பனிமலரே பாடலின் லிரிக்கள் வீடியோ மிகவும் அருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் படக்குழுவினரையும் அந்தப் பதிவில் பாராட்டியுள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இதில் நடிகை பாக்யஸ்ரீ போஸ் நாயகியாக நடித்துள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜானு சாந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
நடிகர் ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#PANIMALARE from #Kaantha is awesome 👌🏻https://t.co/db9HYyIFrb
Well done brothers @dulQuer @RanaDaggubati ❤️
— Ravi Mohan (@iam_RaviMohan) August 12, 2025
Also Read… இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசிலின் ஓடும் குதிரை சாடும் குதிரை படத்தின் ட்ரெய்லர்