Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ravi Mohan : நடிப்பதற்குப் பணம் பெற்ற வழக்கு.. ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Bobby Touch Gold Universal Company Files A Case Against Ravi Mohan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ரவி மோகன். இந்நிலையில், இவர் மீது பண மோசடி குறித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுனத்திடம் இருந்து, படம் நடிப்பதாகக் கூறி ரூ.6 கோடி வாங்கியதாக வழக்குப் பதிவு. இந்த வழக்கிற்கு நடிகர் ரவி மோகன் தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ravi Mohan : நடிப்பதற்குப் பணம் பெற்ற வழக்கு.. ரவி மோகன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் ரவி மோகன் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Jul 2025 17:52 PM

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தற்போது இவர் தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். ரவி மோகன் ப்ரொடக்ஷன்ஸ் (Ravi Mohan Productions) நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம், தான் நடிக்கும் ப்ரோ கோட் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரவி மோகன் மீது பாபி டச் கோல்டு யுனிவர்சல் (Bobby Touch Gold Universal) என்ற தயாரிப்பு நிறுவனம் வழக்குப் பதிவு செய்துள்ளது. நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதற்காக வாங்கிய முன்பணம் சுமார் ரூ. 6 கோடியைத் திரும்பத் தரக்கோரி வழக்குப் பதிவு செய்துள்ளது. நடிகர் ரவி மோகன் படத்தில் நடிப்பதாகக் கூறி, சுமார் ரூ. 6கோடியை பெற்று இன்னும் அந்த படத்தின் எந்த வேலைகளும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் ரவி மோகன் வாங்கிய முன்பணத்தைத் திருப்பித் தரகோரியும், வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court), நடிகர் ரவி மோகனை பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை வரும் 2025 ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க : நான் ஜீனியஸ் இல்ல… சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி!

நடிகர் ரவி மோகன் மீது வழக்கு

நடிகர் ரவி மோகன் பிரபல தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனத்தின் கீழ், சுமார் 2 படங்களில் நடிப்பதாகக் கடந்த 2024ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்காக அவர் சுமார் ரூ. 6 கோடியை முன்பணமாகப் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த இரு படங்களின் பணிகளும் தொடங்கப்படாததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாததாகத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

மேலும் நடிகர் ரவி மோகன் அந்த பணத்தை, தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் செலவிற்கோ அல்லது அவர் நடிக்கும் புதிய படத்திற்கோ பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாக நடிகர் ரவி மோகன் படத்தை தயாரிக்கவும், மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிப்பதற்கும் தடை விதிக்கவேண்டும் என பாபி டச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரவி மோகன் பதிலளிக்கவேண்டி வரும் 2025, ஜூலை 23ம் தேதியில் வழக்கை ஒத்திவைத்துள்ளது.

ரவி மோகனின் பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவன வழக்கு குறித்த பதிவு

நடிகர் ரவி மோகன் புதிதாகப் பராசக்தி, கராத்தே பாபு, ப்ரோ கோட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு ஜீனி என்ற படம் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.