Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan : திரைத்துறையில் 65 ஆண்டுகளை நிறைவு செய்தார் கமல்ஹாசன்!

Kamal Haasans 65 Years Of Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவில் சிறுவயது முதலே நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் நடிப்பில் முதன்முறையாக வெளியான படம் களத்தூர் கண்ணம்மா. இப்படம் வெளியாகி இன்றோடு சுமார் 65 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Kamal Haasan :  திரைத்துறையில் 65 ஆண்டுகளை நிறைவு செய்தார் கமல்ஹாசன்!
கமல்ஹாசன்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 12 Aug 2025 19:05 PM

கோலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர் என்றால் உதாரணமாக காட்டப்படுபவர் உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தற்போது உச்ச நடிகராக இருந்து வருகிறார். மேலும் தற்போது அரசியல்வாதியாகவும் (Politician) சேவையாற்றி வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் களத்தூர் கண்ணம்மா (Kalathur Kannamma). கடந்த 1960ம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலமாகத்தான் கமல்ஹாசன் சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படமானது கடந்த 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதியில் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்றோடு சினிமாவில் சுமார் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தளபதி விஜய்யின் நடிப்பில் GOAT vs OG படம் உருவாகுமா? வெங்கட் பிரபு விளக்கம்!

ஏ.வி.எம். ஸ்டுடியோ வெளியிட்ட பதிவு

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இதுவரை சுமார் 230 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் மற்ற நடிகர்களின் படங்களைத் தயாரித்து வருகிறார். இவரின் தயாரிப்பில் இறுதியாக அமரன் மற்றும் தக் லைஃப் போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது. இதில் இந்த தக் லைப் படத்தில் முன்னணி வேடத்தில் கமல்ஹாசன் நடிக்க, அவருடன் நடிகர் சிலம்பரசனும் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதையும் படிங்க : அந்த ரகசியத்தை லோகேஷும் நானும்… – அனிருத்!

அரசியல் நுழைவு :

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினர். பின் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக தேர்தலிலும் போட்டியிட்டார். மேலும் இவர் சமீபத்தில் மாநிலங்களவை எம்பி ஆக பதவியேற்றார். இந்நிலையில், இவருக்கு பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர் . இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 12ம் தேதியோடு நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நுழைந்து 65வது வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.