Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியில் ரீமேக்காகும் வைபவின் ‘பெருசு’ திரைப்படம்!

Perusu Movie Hindi Remake : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் வைபவ். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டு வெளியான படம் பெருசு. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தியில் ரிமேக்காகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியில் ரீமேக்காகும் வைபவின் ‘பெருசு’ திரைப்படம்!
பெருசு திரைப்படம்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 17 Aug 2025 23:41 PM

நடிகர் வைபவின் (Vaibhav) நடிப்பில், தமிழ் சினிமாவில் பல்வேறு படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு , மார்ச் 14 ஆம் தேதியில் வெளியான திரைப்படம்தான் பெருசு (Perusu). அடல்ட் காமெடி கதைக்களத்துடன் இப்படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தில் நடிகர் வைபவ் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் நடிகர்கள் சுனில் ரெட்டி (Sunil Reddy), நிஹாரிகா (Niharika NM), சாந்தினி தமிழரசன், பாலா சரவணன் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குநர் இளங்கோ ராம் இயக்கியிருந்தார். இந்த படமானது மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தமிழில் வெளியான இப்படமானது, தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இந்தி வெப் சீரிஸ் இயக்குநர் ஹன்சல் மேத்தா (Hansal mehta) இயக்கவுள்ளதாகவும், தயாரிப்பாளர் முகேஷ் சப்ரா தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படிங்க : சூர்யாவின் 46வது படத்தில் நடிக்கும் அனிமல் நடிகர்?

நடிகர் வைபவின் பெருசு படம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

இந்த பெருசு திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் முதியவர் ஒருவர் இறந்த பிறகு, நடக்கும் அடல்ட் காமெடி மற்றும் எமோஷனல் கதைக்களம் கொண்ட திரைப்படமாக வெளியாகியிருந்தது. இந்த படம் ஏற்கனவே டென்டிகோ என்ற இலங்கை மொழி படத்தின், தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில், இந்த படத்தின் தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து. தற்போது இந்தியிலும் ரீமேக் ஆக்கவுள்ளது.

இதையும் படிங்க : அரசியல் பத்தி என்னிடம் கேட்காதீங்க.. ஸ்ருதி ஹாசன் பேச்சு!

இப்படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகன் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நிஹாரிகா நடித்திருந்தார். இந்த பெருசு திரைப்படமானது தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் உள்ளது. ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

நடிகர் வைபவின் புதிய திரைப்படம் :

நடிகர் வைபவின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் சென்னை சிட்டி கேங்ஸ்டரஸ். இந்தப் படமானது இவருக்குக் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் படம் ஆலம்பனா. இந்த படமானது கடந்த 2025, மார்ச் மாதத்திலேயே வெளியாகவேண்டியது. சில பிரச்னைகள் காரணமாக இன்று வரையிலும் வெளியாகாமல் உள்ளது. இப்படத்தை அடுத்ததாக, மேலும் புதிய இயக்குநர் ஒருவருடன் நடிகர் வைபவ் புதிய படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.