கருப்பு படத்தை அவர்களுக்காகதான் உருவாக்கினேன் – ஆர்.ஜே.பாலாஜி ஓபன் டாக்
RJ Balaji said I made this film for the audience | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. இவரது இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு.
ரேடியோவில் ஆர்.ஜே-வாக தனது பணியைத் தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜி தற்போது தமிழ் சினிமாவில் நடிகராகவு இயக்குநராகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றார். அதன்படி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்களை மையமாக வைத்தே பலப் படங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக உருவெடுத்தார் ஆர்.ஜே.பாலாஜி. அவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து அந்தப் படங்களும் காமெடின் செண்டிமெண்ட் சப்ஜெக்டிலேயே இருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை அவரே இயக்கவும் தொடங்கினார் ஆர்.ஜே.பாலாஜி. தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் என ஆர்.ஜே.பாலாஜியின் தயாரிப்பில் உருவாகும் அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.
தொடர்ந்து தான் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கி வந்த ஆர்.ஜே.பாலாஜி அதிலிருந்து விலகி மற்ற நாயகன்களின் படத்தை இயக்க வந்ததுதான் கருப்பு படம். ஆம் நடிகர் சூர்யாவின் 45-வது படமான கருப்பு படத்தை ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று அனைத்துப் பிரச்சனைகளையும் கடந்து ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




கருப்பு படத்தை அவர்களுக்காகதான் உருவாக்கினேன்:
கருப்பு படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டும் ரூபாய் 100 கோடி வசூலை கடந்துள்ளது. மேலும் உலகம் முழுவது 207 கோடிகளை கடந்து வசூலித்து வருகின்றது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது, நான் இந்தப் படத்தை குடும்பப் பார்வையாளர்களுக்காகவே உருவாக்கினேன். விமர்சகர்களுக்காகவோ அல்லது இணையத்தில் இருப்பவர்களுக்காகவோ நான் இந்தப் படத்தை உருவாக்கவில்லை. படம் வெளியாவதற்கு முன்பே நான் இதைத் தெரிவித்திருந்தேன். இது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம். எனவே, பார்வையாளர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… சலார் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? – இயக்குநர் பிரஷாந்த் நீல் கொடுத்த அப்டேட்!
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:
Dir #RJBalaji Recent
– I made this film for the audience, and now I’m seeing all of you liking it.#Karuppupic.twitter.com/45muxOUA4l— Movie Tamil (@_MovieTamil) May 22, 2026