Vishwanath And Sons: சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸ்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Vishwanath And Sons Release Date: சூர்யாவின் நடிப்பில் 46வது திரைப்படமாக தயாராகியுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இப்படம் எப்போது வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா (Suriya) நடித்துவந்த 46வது திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இதை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamshi) தயாரித்துள்ளார். இதில் சூர்யா அதிரடி பேமிலி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழியை மையமாக கொண்ட திரைப்படமாக தயாராகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மே இறுதியில் தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படமானது தன்னை விடவும் 20 வயது மூத்த பிசினஸ்மேன் மீது, கதாநாயகிக்கு வரும் காதலை மையமாக கொண்ட ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் தயாராகியுள்ளது.
இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், ரிலீஸ் எப்போது என எதிர்பார்க்கப்பட்டுவந்தது. அந்த வகையில், தற்போது இப்படத்தன் ரிலீஸ் தேதியை படக்குழு லாக் செய்துள்ளது. சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது, 2026 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகாவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் அந்த பாலிவுட் நடிகரின் கேமியோ இருக்கா? வைரலாகும் தகவல்
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Dear Anbaana Fans, here’s our little note to keep the celebrations going ❤️
Make way for #VishwanathAndSons 😎
Arriving to conquer cinemas worldwide on AUGUST 14th, 2026 🔥#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84… pic.twitter.com/JNCybaHoEU— Sithara Entertainments (@SitharaEnts) May 28, 2026
சூர்யாவின் இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாக தயாராகிவருகிறதாம். இப்படம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை மாதத்தின் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், கருப்பு திரைப்படம் தற்போதுவரையிலும் திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டுவருகிறது. இரு படங்களுக்கும் இடையே கிட்டத்தட்ட 2 மாதமாவது இடைவெளி வேண்டும் என்ற நிலையில் படக்குழு இந்த முடிவை எடுத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படமானது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளதாம்.
இதையும் படிங்க: கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்… ஆர்.ஜே.பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி
அதனால் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது பெரியப்படங்களுடன் மோதாமல் சிங்கிளாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவரும் நிலையில், விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ரிலீசிற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.