Parimala And Co: பாபநாசம் பட பாணியில்… ‘பரிமளா அண்ட் கோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
Parimala And Co Trailer Out: இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் பரிமளா அண்ட் கோ. இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா மற்றும் அனந்திகா உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் பாண்டிராஜ் (Pandiraj). குடும்பம், ஆக்ஷன் மற்றும் அகமெடி என அனைத்து கதைக்களத்தில் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள புதிய திரைப்படம்தான் பரிமளா அண்ட் கோ (Parimala And Co). இப்படத்தில் லீட் நடிகர்களாக ஜெயராம் (Jayaram), ஊர்வசி (Urvashi), மிஷ்கின் (Mysskin), சாண்டி மாஸ்டர், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) மற்றும் அனந்திகா சனில்குமார் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 4 மாதங்களில் முழுமையான ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படத்தில் நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி கணவன் மனைவியாக நடித்துள்ளனர். இப்படமானது ஒரு பேமிலி ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் Foxn இசையமைத்துள்ளார். இந்த கூட்டணியில் உருவான திரைப்படமானது வரும் 2026 ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் இன்று 2026 மே 29ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஜன நாயகன் எப்போ சார் வரும்? – இயக்குநர் எச்.வினோத் கொடுத்த பதில்!
ஜெயராம் மற்றும் ஊர்வசியின் பரிமளா அண்ட் கோ படத்தின் ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
Packed with laughter and loaded with entertainment. 🤩 #ParimalaAndCo Trailer Out now. 💥
🔗 https://t.co/HclnZHhiFP#ParimalaAndCoInCinemasJun5#Jayaram #Urvasi @iamSandy_Off @DirectorMysskin @isanjkayy @Ananthika108 @santoshsoban @iYogiBabu @LycaProductions @gkmtamilkumaran… pic.twitter.com/y2MExvjP7w
— Lyca Productions (@LycaProductions) May 29, 2026
பரிமளா அண்ட் கோ படத்தின் ட்ரெய்லர் எப்படி இருக்கு:
இந்த பரிமளா அண்ட் கோ படமானது ஒரு முழுக்க பேமிலி கதைக்களத்தில் அமைத்துள்ளது. இப்படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளனர். மேலும் இவர்களின் மகள்களாக சஞ்சனா மற்றும் அனந்திகா இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது ஒரு பேமிலி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் கொலை ஒன்றை யாரை செய்தார்?, எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற ஒரு வித்தியாசமான, காமெடி மற்றும் சுவாரஸ்ய திருப்பங்களுடன் நிறைந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரில் ஆக்ஷ்ன், நகைச்சுவை மற்றும் எமோஷனல் போன்றவை கலந்தே இருக்கிறது.
இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தை பார்த்தபிறகு உங்கள் எண்ணம் மாறிவிடும் – கியாரா அத்வானி
இப்படமானது வரும் 2026 ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படமானது பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் இப்படம் வெளியாகிறதா என பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. இப்படத்திற்கு அந்த அளவிற்கு ப்ரோமோஷன்கள் இல்லை என்றும், பலருக்கும் இப்படி ஒரு படம் வெளியாகிறதா? என தெரியவில்லை எனும் சினிமா வட்டாரங்களில் பேச்சு இருக்கிறது. பரிமளா அண்ட் கோ படம் வெற்றியாகுமா? இல்லை தோல்வியாகுமா ? என வெளியானால்தான் தெரியும்.