கருப்பனின் பேயாட்டம்.. பரிமளா & கோ பட ரிலீஸ் தேதி மாற்ற காரணம் இதுதான் – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
Director Pandiraaj About Parimala And Co: கோலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்துவருபவர் பாண்டிராஜ். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர் பரிமளா & கோ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிவைக்க காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர். குடும்பம், நட்பு மற்றும் உறவுகள் முக்கியத்துவம் கொடுக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் இயக்கத்தில் இறுதியாக தலைவன் தலைவி (Thalaivan Thalaivii) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கியுள்ள படம்தான் பரிமளா அண்ட் கோ (Parimala And Co).
இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, அனந்திகா மற்றும் மிஷ்கின் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026 ஜூன் 5ம் தேதியில் வெளியாகவுள்ளது. அண்மையில் வீடியோ ஒன்றில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய காரணம் பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் ராஜேஷ் ஓபன் டாக்
பரிமளா அண்ட் கோ படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய காரணம் குறித்து பேசிய பாண்டிராஜ் :
அந்த வீடியோவில் பேசிய பாண்டிராஜ், ஆரம்பத்தில் பரிமளா அண்ட் கோ படத்தை மே 1ம் தேதியில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். அப்போது தனுஷ் சாரின் கர படம் வெளியாகியிருந்தது. அதனால் பின்பு மே 14ம் தேதியில் வெளியிட நினைத்தோம், ஆனால் கருப்பு படம் வெளியாகியிருந்தது. அதி தொடர்ந்து மே 28ல் வெளியிட திட்டமிட்டோம்.
இதையும் படிங்க: D 55 படத்தில் தனுஷ் சாரின் டான்ஸ் வேற லெவல் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி
ஆனால் இன்னும் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் பயங்கரமாக போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் பரிமளா அண்ட் கோ படத்தை ஒருவாரம் தள்ளிப்போகலாம் என நினைத்தோம். ஆனால் உண்மையில் மே 1ம் தேதியில் வெளியிட நினைத்தோம், ஏன்னென்றால் பசங்க படம் மே 1ல் தான் வெளியாகியிருந்தது” என அதில் அவர் கூறியிருந்தார்.
பரிமளா அண்ட் கோ படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசியது தொடர்பான வீடியோ:
Director #Pandiraj Recent:
We first planned to release #ParimalaAndCo on May 1, then May 14, and later May 28. But due to the successful run of #karuppu the film will now release on June 5.
pic.twitter.com/5iDAaSqaqT— Movie Tamil (@_MovieTamil) May 29, 2026
பரிமளா அண்ட் கோ படமானது திரையரங்குகளில் வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகிறது. இப்படமானது குடும்பம், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.