AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Blast: அர்ஜுனின் பிளாஸ்ட் படம் பிளாஸ்ட் ஆச்சா? இல்ல புஸ்ஸுன்னு போச்சா? விமர்சனங்கள் இதோ!

Arjun Sarja Blast Movie Review: நடிகர் அர்ஜுன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் நடிப்பில் உருவாகியிருந்த படம்தான் பிளாஸ்ட். இதை சுபாஷ் கே ராஜ் இயக்கியிருந்த நிலையில் இன்று 2026 மே 28ம் தேதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இப்படம் எவ்வாறு இருக்கிறது?, இப்படத்தின் விமர்சனங்கள் பற்றி விவரமாக பார்க்கலாம்.

Blast: அர்ஜுனின் பிளாஸ்ட் படம் பிளாஸ்ட் ஆச்சா? இல்ல புஸ்ஸுன்னு போச்சா? விமர்சனங்கள் இதோ!
பிளாஸ்ட் திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 May 2026 13:44 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரதபலமான நாயகனாக இருந்துவர்பவர் அர்ஜுன் சர்ஜா (Arjun Sarja). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்தான் பிளாஸ்ட் (Blast). இப்படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் (Subash K Raj) இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் சர்ஜா நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் அபிராமி (Abirmi) மற்றும் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan) இணைந்து நடித்துள்ளனர். இந்த பிளாஸ்ட் திரைப்படமானது ஆக்ஷன் மற்றும் அதிரடி குடும்ப திரைப்படமாக அமைந்துள்ள நிலையில், தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் (Ravi Basrur) இசையமைத்துள்ளார். இவர் கேஜிஎஃப் 1 & 2 மற்றும் டாக்ஸிக் போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படமானது இன்று 2026 மே 28ம் தேதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு கிடைத்திருக்கும் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது – நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் எப்படி இருக்கு:

பிளாஸ்ட் திரைப்படமானது படத்தின் டைட்டிலுக்கு ஏற்றதுபோலவே பிளாஸ்ட்டாகத்தான் இருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைமென்ட் நிறுவனம் நம்பி தயாரித்துள்ள நிலையில், இயக்குனர் சுபாஷ் கே ராஜ் சிறப்பாகவே இயக்கியுள்ளார். இந்த பிளாஸ்ட் திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் அபிராமி கணவன் மனைவியாகவும், அவரின் மகளாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இப்படமானது ஒரு குடும்பத்திற்குள் நுழையும் மற்ற ரௌடிகளை அட்டாக் சேயும் குடும்பமாக அர்ஜுனின் குடும்பம் உள்ளது. இதில் அர்ஜுன், ப்ரேதேஹி முகுந்தன் மற்றும் அபிராமி மூவருமே ஆக்ஷன் வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் கராத்தே மாஸ்டராக அர்ஜுன், கராத்தே தெரிந்தவராக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?

பிளாஸ்ட் திரைப்படத்தின் விமர்சனங்கள் குறித்து வைரலாகும் பதிவு:

இப்படத்தின் முதல் பாதி ஆரம்பம் முதலே அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. இப்படம் அதன் பெயருக்கு ஏற்றதுபோலவே பிலாஸ்ட்டாகத்தான் உள்ளது. இதில் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்-வின் இசையை பற்றி சொல்லவே தேவையில்லை, படத்தின் மிகப்பெரிய தூணாக அவரின் இசைதான் உள்ளது. இப்படத்தில் அர்ஜுனின் குடுமப்த்திற்கு ரௌடிகள் நுழைய என்ன காரணம்? என்பதே படத்தின் மைய கதை. ஆக்ஷன் கதைகளை விரும்புபவர்கள் திரடியரங்குகளில் சென்று பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படம் பிளாஸ்ட்.

Follow Us