AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது – நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்

Actress Preity Mukhundhan talks about Delelu character in Sarvam Maya movie | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ப்ரீத்தி முகுந்தன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த சர்வம் மாயா படம் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது – நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்
சர்வம் மாயாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 May 2026 13:39 PM IST

தமிழ் சினிமாவில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ப்ளாஸ். நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் அவரது மகளாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்து உள்ளார். தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. தொடர்ந்து படக்குழுவினர் பல பேட்டிகளை அளித்து வருகின்றனர். அப்படி இருக்கும் சூழலில் நடிகர் ப்ரீத்தி முகுந்தன் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் முன்னதாக மலையாளத்தில் நடித்த சர்வம் மாயா படம் குறித்தும் தற்போது நடித்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் ப்ளாஸ்ட் படம் குறித்தும் வெளிப்படையாக பேசி இருந்தார்.

அதன்படி மலையாள சினிமாவில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சர்வம் மாயா. இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரியா ஷிபு நாயகியாக நடித்து இருந்தார். மேலும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது:

நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறியதாவது ஆரம்பத்தில், சர்வமும் மாயா படத்தில் டெலேலு கதாபாத்திரத்தை நான் ஏற்று நடிக்கவிருந்தேன் ஆனால் திரைக்கதை மாற்றப்பட்டதால் எனது கதாபாத்திரமும் மாறிப்போனது. இருப்பினும், அப்படக் குழுவினருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக அமைந்ததால், நான் அவர்களுடனே தொடர்ந்து பணியாற்றினேன். சில சமயங்களில், ஒரு கதாபாத்திரம் திரைப்படம் முழுவதும் வந்தாலும் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் வேறு சில கதாபாத்திரங்கள் மிகக் குறைந்த நேரமே திரையில் தோன்றினாலும், ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன என்று அவர் தெரிவித்து இருந்தார்.

Also Read… உங்கள் கருணையாலும் பாசத்தாலும் என்னை நெகிழச் செய்ததற்கு நன்றிகள் – ரசிகர்களுக்காக நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட கார்த்தி

இணையத்தில் வைரலாகும் ப்ரீத்தி முகுந்தின் பேச்சு:

Also Read… விஜய் பதவி ஏற்பு.. முதல் வரிசையில் மூன்று பேர் மிஸ்ஸிங்.. குடும்பம் குறித்து பேசிய சமுத்திரக்கனி!

Follow Us