AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RJ Balaji: கருப்பு திரைப்பட அபார வெற்றி.. மதுரை பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அருவாள் சாத்திய ஆர்.ஜே.பாலாஜி!

RJ Balaji Offering 18 Feet Arival To Pathinettam Padi Karuppasamy: ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மற்றும் சூர்யாவின் நடிப்பில் கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு. இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், மதுரை பதினெட்டாம்படி கருப்பசுவாமிக்கு, 18 அடி அரிவாளை ஆர்.ஜே.பாலாஜி காணிக்கையாக வழங்கியுள்ளார்.

RJ Balaji: கருப்பு திரைப்பட அபார வெற்றி.. மதுரை பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அருவாள் சாத்திய ஆர்.ஜே.பாலாஜி!
கருப்பனுக்கு காணிக்கை செலுத்திய ஆர்.ஜே.பாலாஜி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 May 2026 15:10 PM IST

தென்னிந்திய மக்களிடையே கதாநாயகனாக பிரபலமானவர் சூர்யா (Suriya). இவரின் 45வது திரைப்படமாக உருவாகி, தற்போது திரையரங்குகளில் வெற்றிபெற்றுவருவதுதான் கருப்பு திரைப்படம் (Karuppu). இப்படத்தில் சூர்யா கருப்பன், வழக்கறிஞர் மற்றும் போலீஸ் என கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, மிக முக்கியமான வேடத்தில் திரிஷா (Trisha) நடித்துள்ளார். இப்படத்தின் ஆரம்பத்திலிருந்தே நம்மை கதைக்கு ஆழ்த்தி செல்பவராக நடிகர் இந்திரன்ஸ் (Indrans) இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருக்கும் நிலையில், அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் தெய்வீகம் போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது.

இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுவரும் நிலையில், இன்று 2026 மே 23ம் தேதியில் ஆர்.ஜே.பாலாஜி மதுரையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பசாமியை தரிசனம் செய்துள்ளார் (Madurai Pathinettam Padi Karuppasamy). மேலும் படத்தின் வெற்றியை அடுத்து, கருப்பனுக்கு கிட்டத்தட்ட 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அரிவாளை (18 Feet Arival) காணிக்கையாக சாற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பெத்தி பட ஹெல்லல்லல்லோ வீடியோ பாடல்.. ராம் சரணுடன் சிறப்பு நடனத்தில் ஸ்ருதிஹாசன்!

பதினெட்டாம்படி கருப்பனுக்கு 18 அடி அரிவாளை காணிக்கையக கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி தொடர்பான வீடியோ:

சூர்யாவின் கருப்பு திரைப்படமானது திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் வெளியகைவருகிறது. இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்களை கடந்த நிலையில், இதுவரை உலகமெங்கும் கிட்டத்தட்ட ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் ஆரம்பத்தில் 2026 மே 14ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் நிதி பிரச்சனையின் காரணமாக, ஒரு நாள் தாமதமாகி மே 15ம் தேதியில் வெளியாகியிருந்தது.

இதையும் படிங்க: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்.. எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!

அந்த வகையில் இப்படம் தோல்வியில் முடியும் என பலரும் கூறிய நிலையில், அதையெல்லாம் தவிடுபிடியாக்கி, 2026ம் ஆண்டில் ரூ200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த முதல் படமாக இது அமைந்துள்ளது. அதிலும் தமிழகத்தில் மட்டும் சூர்யாவின் கருப்பு படமானது ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்களிலே முதல் முறையாக தமிழகத்தில் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்த முதல் படமாக கருப்பு அமைந்துள்ளது. மேலும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பல முக்கிய திரையரங்குகளில் சென்று ரசிகர்களை சந்தித்துவருகிறாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us