அந்த இயக்குநருடன் பணியாற்றவேண்டும் என்று ஆசை வந்தது – அர்ஜுன்
Action King Arjun Interview: பான் இந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் அடுத்ததாக ப்ளாஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் இருக்கும் அவர் துரந்தர் பட இயக்குநர் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.
கன்னட சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் அர்ஜுன். இவரை திரையுலகினரும் ரசிகர்களும் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைப்பார்கள். அதிரடியான சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களிலேயே நடிகர் அர்ஜுன் அதிக அளவில் நடித்துள்ளார். புரூஸ்லியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் ஆக்ஷன் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நாயகனாக ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வந்த அர்ஜுன் சமீப காலமாக கதைக்கு முக்கியதுவமாக இருக்கும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். அது வில்லன் கதாபபத்திரம் என்றாலும் யோசிக்காமல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் அர்ஜுன்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் ப்ளாஸ்ட். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் உடன் இணைந்து நடிகர்கள் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026- ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.




துரந்தர் பட இயக்குநருடன் பணியாற்றவேண்டும் என்று ஆசை:
நீண்ட காலத்திற்குப் பிறகு, திறமைமிக்க இயக்குநரான ஆதித்யா தாருடன் பணியாற்ற வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. அந்தப் படத்தில் ஒரு இந்தியச் சிந்தனை இழையோடியிருந்தது. ஆனால், அதை அவர்கள் முற்றிலும் மாறுபட்ட, சமகாலத்திற்கு ஏற்ற மற்றும் மிக இயல்பான ஒரு பாணியில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். நான் அந்த இரண்டு படங்களையுமே பார்த்தேன். அவை மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ரன்வீர் சிங் மிக அற்புதமாக நடித்திருந்தார். அதேபோல், மாதவனும் அப்படத்தில் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். சொல்லப்போனால், அப்படத்தின் உண்மையான கதாநாயகனே மாதவன் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரம்தான் என்று நடிகர் அர்ஜுன் தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… இனி முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள்… கோலிவுட் சினிமாவிற்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் விஜய்
இணையத்தில் வைரலாகும் அர்ஜுன் பேச்சு:
Action King #Arjun about #Dhurandhar
– After a long time, I felt that I wanted to work with Dhurandhar director #AdityaDhar.
– In that film, there is an Indian thought, but they presented it in a different, contemporary, and authentic way.
– I watched both the films. They were… pic.twitter.com/35FwoA4vhe
— Movie Tamil (@_MovieTamil) May 25, 2026
Also Read… அவள் உலக அழகியே… இணையத்தில் வைரலாகும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்