AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு – என்ன காரணம்?

Rupee Struggles Against Dollar: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் புதிய சரிவை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 160 பைசா வரை சரிந்து, 95.22 என்ற புதிய நிலையை எட்டியது

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு – என்ன காரணம்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 30 Mar 2026 16:50 PM IST

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்து,  95 என்ற நிலையை எட்டியள்ளது. . இந்திய ரூாபய் மதிப்பு மார்ச் 30, 2026 அன்று திங்கள்கிழமை அன்றைய வர்த்தக நேர முடிவில்,  95.22 என்ற புதிய சரிவை எட்டியது ஆரம்பத்தில் நல்ல முன்னேற்றத்துடன் தொடங்கிய ரூபாய், பின்னர் 160 பைசா வரை சரிந்து இந்த நிலையை அடைந்தது. இது வரலாற்றில் மிகப்பெரும் சரிவாக பார்க்கப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு

இந்திய ரிசர்வ் வங்கி  இரவு நேரத்துக்கு வங்கிகள் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணய நிலை வரம்பை 100 மில்லியன் டாலராக குறைத்ததைத் தொடர்ந்து, ரூபாய் ஆரம்பத்தில் 93.62 என்ற நிலையில் இருந்து  93.57 வரை உயர்ந்தது. இது அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 128 பைசா உயர்வாக இருந்தது. ஆனால் இந்த உயர்வு நீண்ட நேரம் நீடிக்காமல், பின்னர் ரூபாய் திடீரென சரிவை சந்தித்தது.

இதையும் படிக்க : கலால் வரி குறைக்கப்பட்டும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை – காரணம் என்ன?

என்ன காரணம்?

இந்த சரிவுக்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலைகள் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. குறிப்பா கச்சா எண்ணெய் உயர்வு, மற்றும் ஈரான் – அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நீடிக்கும் போர் பதற்றம் இந்திய ரூபாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 115.50 டாலர் வரை உயர்ந்துள்ளது.

மேலும் அமெரிக்க டாலர் வலுவாக உள்ளதும் இந்திய ரூபாய் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. டாலர் வலுவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் அதனை பாதுகாப்பான இடமா கருதுகின்றனர். இது ரூபாய் போன்ற நாணயங்கள் மீள சிரமத்தை ஏற்படுத்துகின்றன.  இதனால் உள்ளூர் பங்கு சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்செக்ஸ் 1733 புள்ளிகள் சரிந்து 71,849 என்ற நிலையில் இருந்தது. அதே போல நிஃப்டி 529 புள்ளிகள் சரிந்து 22,291 என்ற நிலையை எட்டியது. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.4,367 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதும் இந்திய சந்தையில் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : உங்கள் மொத்த வருமானத்தையும் EMI குடித்து விடுகிறதா?.. இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!

மொத்தத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வலுவான டாலர் மதிப்பு மற்றும் உலக அரசியல் பதற்றங்கள் காரணமாக ரூபாய் தொடர்ந்து அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலை எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இந்தியாவின் பொருளாதாரம் இருக்கும் என்பதால் அனைவரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Follow Us