AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளுக்கு பிபிஎஃப் கணக்கு துவங்குவதால் என்ன நன்மை? எப்படி துவங்குவது?

PPF For Children : பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்காக சிறிய வயதிலேயே சேமிப்பு கணக்கு தொடங்க நினைத்தால், பிபிஎஃப் கணக்கு துவங்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எப்படி கணக்கு துவங்குவது, வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்கு பிபிஎஃப் கணக்கு துவங்குவதால் என்ன நன்மை? எப்படி துவங்குவது?
Ppf Account
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 Mar 2026 20:46 PM IST

இன்றைய காலகட்டங்களில் பல்வேறு முதலீடு வாய்ப்புகள் இருந்தாலும், பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானம் தரும் திட்டமாக பிபிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கல்வி, திருமணம் போன்ற எதிர்கால தேவைகளுக்காக சிறிய வயதிலேயே சேமிப்பு கணக்கு தொடங்க நினைத்தால், பிபிஎஃப் கணக்கு துவங்கு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால் பிபிஎஃப் கணக்கை குழந்தைகளுக்கு நேரடியாக துவங்க முடியாது. பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் குழந்தையின் பெயரில் துவங்கலாம். மேலும் ஒரு குழந்தைக்கு ஒரு பிபிஎஃப் கணக்கு துவங்க மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு பிபிஎஃப் கணக்கு துவங்குவதால் ஏற்படும் நன்மைகள்

மேலும் இந்த திட்டத்தில் கணக்கு துவங்க குழந்தைகளுக்கு வயது வரம்பு கிடையாது என்பதால் சிறு குழந்தையாக இருக்கும்போதில் இருந்தே கணக்கு துவங்கலாம். இந்த கணக்கை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் இருந்து திறக்கலாம். இதற்கு பிறப்பு சான்றிதழ், ஆதார், போன்ற ஆவணங்கள் அவசியமாகும்.

இதையும் படிக்க : வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்க பே ஸ்லிப் இல்லையா?.. கவலை வேண்டாம்.. இந்த அம்சங்கள் போதும்!

மேலும் ரூ.100 இருந்தாலே இந்த பிபிஎஃப் கணக்கை துவங்க முடியும். ஆனால் கணக்கு செயல்பாட்டில் வைத்திருக்க ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் அதிகபட்சமாக ஒரு நிதியாண்டியில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த வரம்பு பெற்றோர் மற்றும் குழந்தை கணக்கு சேர்த்து பொருந்தும். மேலும், ரூ.1.5 லட்சத்தை மீறி முதலீடு செய்தால் அதற்கு வட்டி மற்றும் வரி சலுகையும் கிடைக்காது.

வரி சலுகை

தற்போது இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.1 சதவிகிதமாக உள்ளது. இது ஆண்டு ஆண்டு சேர்க்கை வட்டி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒரு 3 வயது குழந்தைக்கு 15 ஆண்டுகளில் ரூ.35 லட்சம் வரை சேமிக்க விரும்பினால் மாதத்திற்கு ரூ. 10, 882 முதலீடு செய்ய  வேண்டும். இதன் மூலம் குழந்தைக்கு 18 வயதாகும் போது நம் இலக்கை அடைய முடியும்.

இதையும் படிக்க : போஸ்ட் ஆபிஸ் திட்டம்: ரூ.2 லட்சத்துக்கு ரூ.89,990 வரை லாபம் – விவரம் இதோ

மேலும் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்வதால் வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி சலுகை பெறலாம். அதே போல இந்த கணக்கில் கிடைக்கும் வட்டி மற்றும் முதலீடு தொகைக்கு முழுமையான வரி சலுகை கிடைக்கும்.

Follow Us