AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!

Indian Rupee Has Crossed 94 Rupees Against Dollar | ஈரான் போர் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ரூ.94 என்ற மிக கடுமையான வீழ்ச்சியை இந்திய ரூபாய் கண்டுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Mar 2026 12:04 PM IST

ஈரான் போர் (Iran War) காரணமாக இந்திய ரூபாய் (Indian Rupee), கடுமையான வீழ்ச்சியை கண்டு வரும் நிலையில் இன்று (மார்ச் 27, 2026) அமெரிக்க டாலருக்கு (America Dollar) நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. அதாவது, இன்றைய நிலவரப்படி இந்திய ரூபாய் இதுவரை இல்லாத குறைந்த அளவாக ரூ.94.15-ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் கடுமையாக சரிந்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் காரணமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய ரூபாய்

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வந்த போர் காரணமாக உலக அளவில் புவிசார் பதற்றங்கள் அதிகரித்தன. ஆனால், அமெரிக்க டாலர் மட்டும் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டு வருகிறது. அந்த வகையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்

இந்திய ரூபாய் இதுவரை இல்லாத குறைந்த அளவான ரூ.94.15-ஐ எட்டியது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று இதுவரை இல்லாத குறைந்த அளவான ரூ.94.15-ஐ எட்டியது. மார்ச் 25, 2026 முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.97 ஆக இருந்தது. நேற்று (மார்ச் 26, 2026), பொது விடுமுறை என்பதால் அன்றைய தினம் இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று மார்ச் 25 தேதியை விடவும் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்வு.. ஒரு லிட்டருக்கு இவ்வளவா?

காலை முதல் தொடர் இழப்பை சந்தித்த இந்திய ரூபாய்

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.15 ஆக இருந்தது. அதுவே காலை 10.45 மணி நிலவரப்படி, ரூ.94.27 என்ற அளவில் வர்த்தகமாக வந்தது. இதுவரை இல்லாத அளவு மிக கடுமையான வீழ்ச்சியை இந்திய ரூபாய் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us