AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.12,000 சம்பளம் முதல் ரூ.32,000 கோடி நிறுவனம் வரை.. சாதித்து காட்டிய திருச்சிக்காரர்.. யார் இந்த கிரிஷ் மாத்ருபூதம்!

Trichy Man Achieved Global Tech Success | திருச்சியை சேர்ந்த நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ரூ.12,000-க்கு செய்த வேலையை உதறிவிட்டு, புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி தற்போது ரூ.32,000 கோடியாக அந்த நிறுவனத்தை வளர்த்துள்ளார். அவர் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.12,000 சம்பளம் முதல் ரூ.32,000 கோடி நிறுவனம் வரை.. சாதித்து காட்டிய திருச்சிக்காரர்.. யார் இந்த கிரிஷ் மாத்ருபூதம்!
கிரிஷ் மாத்ருபூதம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Oct 2026 13:06 PM IST

உறுதியான எண்ணமும், உழைப்பும் இருந்தால் நினைத்தவற்றை மிக சுலபமாக செய்து முடித்துவிட முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறு, பலரும் பூஜியத்தில் இருந்து தங்களது வாழ்க்கையை தொடங்கி சாதித்துள்ளனர். அந்த வகையில், திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கி சாதனை படைத்துள்ளார். யார் அவர், அப்படி என்ன செய்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருச்சி முதல் சர்வதேச நிறுவனம் வரை – சாதித்துக்காட்டிய மாத்ருபூதம்

தமிழகத்தின் திருச்சியை சேர்ந்தவர் கிரிஷ் மாத்ருபூதம். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருச்சி மற்றும் தஞ்சாவூரில் முடித்தவர். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு வெறும் ரூ.12,000 மாத சம்பளத்துக்காக அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இணைந்து பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு ஐடி துறையில் அதிக ஆர்வம் இருந்ததன் காரணமாக, அதில் கால் பதித்தார்.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: வெறும் ரூ.3,000க்கு ஓராண்டு முழுவதும் கட்டணமில்லாப் பயணம்

முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய மாத்ருபூதம்

மென்பொருள் துறையில் இணைந்த இவர் HCL, eForce, Zoho உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு Zoho நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அப்போதுதான் மேனேஜ்மெண்ட் பிரிவில் துணை தலைவராக பணியாற்றியபோது, அவருக்கு கஸ்டமர் சப்போர்ட் சாஃப்ட்வேர்களுக்கான தேவை இருப்பதை அறிந்துக்கொண்டு தனது நண்பர் ஷான் கிருஷ்ணசாமியுடன் இணைந்து Freshworks என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

இதையும் படிங்க : தினமும் 7 கோடி முட்டை… ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வர்த்தகம் – இந்தியாவின் முட்டை நகரின் பின்னணி

6 பேர் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம்

வெறும் 6 பேரை கொண்டு அவர் இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பின்னர் அந்த நிறுவனத்தை படிப்படியாக பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனமாக உயர்த்தியுள்ளார். இந்த நிறுவனம் 2021 ஆம் ஆண்டு அமெரிக்க பங்குச்சந்தையிலும் இடம்பெற்றது. தற்போது இந்த நிறுவனம் சுமார் 32,000 கோடி மதிப்புக்கொண்டதாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான், கிருஷ் தனக்கு சினிமா மீது அதிக ஆர்வம் உள்ள நிலையில், தயாரிப்பாளராகவும் கால் பதித்துள்ளார்.

Follow Us