சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. அரசு அறிவிப்பு!
Small Saving Schemes Interest Rates | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் இந்த காலாண்டில் மாற்றமில்லை என்று அரசு கூறியுள்ளது.
அரசு பல வகையான சிறு சேமிப்பு திட்டங்களை (Small Saving Schemes) செயல்படுத்தி வரும் நிலையில், அவற்றுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளது. 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டுக்கான வட்டி விகிதம் குறித்து அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அரசு செயல்படுத்தும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் என்னவாக உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான முதல் காலாண்டு வட்டி விகிதங்கங்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நிதி ஆண்டு தொடங்கும். இன்று (மார்ச் 31, 2026) என்பதால் நாளை முதல் 2026 – 2027 ஆம் நிதியாண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், 2026 – 2027 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதத்தை அரசு வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2026 முதல் ஜூன் 2026 வரையிலான மூன்று மாத காலக்கட்டம் காலாண்டாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த காலாண்டிலும் பழைய வட்டி விகிதமே பின்பற்றப்படும் என அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : இன்ஸ்டண்ட் பண பரிமாற்றம்.. ஆண்ட்ராய்டு, ஆப்பிளில் உள்ள பேமெண்ட் செயலிகள்.. லிஸ்ட் இதோ!




சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்
| திட்டம் | வட்டி |
| சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் | 8.2 சதவீதம் |
| மூன்று ஆண்டுகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் | 7.1 சதவீதம் |
| பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் | 7.1 சதவீதம் |
| கிசான் விகாஸ் பத்ரா திட்டம் | 7.5 சதவீதம் |
| தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் | 7.7 சதவீதம் |
| மாத வருமான திட்டம் | 7.4 சதவீதம் |
இதையும் படிங்க : நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதாரத்தை மேம்படுத்த பணக்காரர்களின் இந்த சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்!
சிறு சேமிப்பு திட்டங்களில் அதிக முதலீடு செய்யும் பொதுமக்கள்
அரசு அஞ்சலங்கள் மூலம் ஏராளமான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களுக்கு அதிக வட்டி மற்றும் நிதி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அரசின் இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், 2026 – 2027 நிதியாண்டுக்கான முதல் காலாண்டிலும் அரசு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.